இரவு நேர சிந்தனை.

மனிதன் அடைய வேண்டிய உண்மையான இலக்கு

𝑰𝑻𝑴 ✍️ வாழ்வில் இறைவனை வெளிப்படுத்துவதே மனிதனுக்கு விதிக்கப்பட்ட மகத்தான வேலை. விலங்கிற்குரிய உயிர்த் தத்துவமும் செயல்களும் அவன் தொடக்கம், ஆனால் அவன் அடைய வேண்டிய இலக்கோ முழு தெய்வத்தன்மையாகும்.

𝑰𝑻𝑴 ✍️ நம் உள்ளேயே மெய்ப்பொருளைக் காண வேண்டும். அவ்வாறே பூரண வாழ்வின் மூலத்தையும் அடித்தளத்தையும் நம் உள்ளேயே காணவேண்டும். புற அமைப்புகள் எதுவும் அதைத் தரமுடியாது. 

𝑰𝑻𝑴 ✍️ உலகிலும் இயற்கையிலும் உண்மையான வாழ்வைப் பெறவேண்டுமானால் உள்ளே உண்மையான ஆன்மாவை அடைய வேண்டும்.

𝑰𝑻𝑴 ✍️ இயற்கையைத் திருவுருமாற்றம் (transformation) செய்து தெய்வீக வாழ்க்கை வாழ்வதற்கு முதல் தேவை நம்முள்ளே உற்று நோக்கி, உள் உண்மைகளைக் கண்டு, உள்ளே ஆழ்ந்து சென்று அந்த ஆழத்தில் வாழ்வதே ஆகும்.

𝑰𝑻𝑴 ✍️ வாழ்வுப் பிரச்சனைக்கு ஆன்மீகம் கூறும் விடை புறச்சாதனங்களால் தீர்வு காண்பதல்ல. புறச்சாதனங்களையும் பயன்படுத்தலாம், ஆனால் உண்மையான தீர்வு உணர்வும் இயல்பும் ஓர் அகமாற்றம், ஒரு திருவுருமாற்றம் அடைவதன் மூலமே கிடைக்கும்.

𝑰𝑻𝑴 ✍️ நம்பிக்கை மனிதனுக்கு இன்றியமையாதது. நம்பிக்கையின்றி ஆன்மீகப் பாதையில் முன்செல்ல முடியாது. ஆனால் நம்பிக்கையை ஒருவன் மீது திணிக்கக்கூடாது. அது சுயமாக உணர்ந்து வரவேண்டும் அல்லது அந்தராத்மாவின் மறுக்க முடியாத வழிகாட்டுதலாக வரவேண்டும்.

𝑰𝑻𝑴 ✍️"எல்லா அறங்களையும் விதிகளையும் செயல்களையும் துறந்துவிட்டு என்னை மட்டுமே சரணடை", இதையே ஆர்வங்கொண்ட மனிதனுக்கு மிக உயரிய ஆன்மீக நிலையில் வாழ்வதற்கான மிக உயர்ந்த விதியாகக் கடவுள் காட்டுகிறான்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.