ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரரானார் ’சுட்டி குழந்தை’ சாம் கரண்! புதிய சாதனை.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை ’சுட்டி குழந்தை’ சாம் கரண் பெற்றுள்ளார்.

2023 ஐபிஎல் ஏலம் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வீரர் சாம் கரண் பெயர் அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு முன்மொழியப்பட்ட நிலையில் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.50 கோடி என்ற இமாலய தொகைக்கு வாங்கியுள்ளது.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ள வீரர் என்ற பெருமையை சாம் கரண் பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில் விராட் கோலி (ரூ. 17 கோடி) மற்றும் கே.எல் ராகுல் (ரூ.17 கோடி) ஆகியோர் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

இதுநாள் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த சாம் கரண் இனி பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.