உலர் திராட்சை ஊறவைத்த தண்ணீரை குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

உலர் திராட்சையானது சுவையானது மட்டுமல்ல! பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

பொதுவாக உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

உலர் திராட்சையை ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.

2 கப் தண்ணீரில் 150 கிராம் அளவுள்ள உலர் திராட்சையை போட்டு, நன்றாக கொதிக்க வைக்கவும். அந்த தண்ணீரை இரவு முழுவதும் நன்றாக ஊறவைக்க வேண்டும். பின்னர் காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி, மீண்டும் குறைந்த தீயில் சூடாக்கவும். இப்போது இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

❇️ நன்மைகள்

இந்த பானம் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.

சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க ஆயுர்வேதம் பரிந்துரைப்பது இந்த வழியைத் தான்.

❇️ இதய ஆரோக்கியம்

இது உங்களுடைய இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கவும் உதவுகிறது.

திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.

❇️ எலும்புகள்

பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்றுப் பிடிப்பு மற்றும் அதிப்படியான இரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள். அவர்கள், தினமும் ஊற வைத்த உலர் திராட்சையை நீருடன் எடுத்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், உலர் திராட்சையை அன்றாடம் சாப்பிடுவது நல்லது.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.