வாட்சப்பில் புதிய வசதி & புதிய ஈமோஜிகள்!

சிலர் வாட்ஸ்அப் செயலியில் தெரியாமல் அனுப்பிய மெசேஜ் அல்லது புகைப்படங்களை நீக்குவதற்கு Delete for Everyone கொடுப்பதற்கு பதிலாக தவறுதலாக Delete for Me என்பதைக் கொடுத்துவிட்டு அவதிப்படுவார்கள். தற்போது இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு வந்துவிட்டது.

❇️ புதிய அம்சம்

வாட்ஸ்அப் குரூப் அல்லது தனிப்பட்ட நபருக்குத் தவறுதலாக மெசேஜ் அல்லது புகைப்படங்களை அனுப்பும் பட்சத்தில் அதனை Delete for Everyone என்பதை கொடுத்து யாரும் பார்க்காதவாறு செய்துவிடலாம். ஆனால் சில நேரங்களில் Delete for Everyone என்பதை கொடுப்பதற்குப் பதிலாக Delete for Me கொடுத்துவிட்டு அவதிப்பட்ட நிலைமை வந்திருக்கும். ஏனெனில், Delete for Me கொடுத்து அழிக்கப்பட்ட மெசேஜ் அனுப்பிய நபருக்கு மட்டும் தெரியாமல் இருக்கும் ஆனால் குரூப்பில் இருக்கும் மற்றவர்கள் அந்த மெசேஜை பார்க்க முடியும். பின்பு அனுப்பியவர் அந்த மெசேஜை எதும் செய்ய முடியாத நிலை இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு ஒரு புதிய அம்சத்தைக் கொண்டுவந்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

❇️ 5 நொடிகள்

அதாவது Delete for Me கொடுத்து அழிக்கப்பட்ட ஒரு மெசேஜை Undo கொடுத்து திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். அதனை ரெக்கவர் செய்தபின்பு Delete for Everyone கொடுக்க விரும்பினால் கொடுத்துக் கொள்ளலாம். 

குறிப்பாக இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். அதேபோல் Delete for Me கொடுத்து அழிக்கப்பட்ட மெசேஜ் மீது Undo ஆப்ஷன் 5 நொடிகள் திரையில் தோன்றும். அந்த 5 நொடிகளில் Undo கொடுத்து விட்டால்போதும், Delete for Me கொடுத்து அழிக்கப்பட்ட மெசேஜ் திரும்பவும் தோன்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

❇️ பீட்டா அப்டேட்

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு என இருவிதமான பயனர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது மேலும் இந்த மாத தொடக்கத்தில் WhatsApp நிறுவனம் புதிய பீட்டா பதிப்பை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிற்கும் வெளியிட்டுள்ளது. 

2.22.25.12 என்ற எண்ணுடன் கூடிய புதிய பீட்டா அப்டேட் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இருவருக்கும் கிடைக்கிறது. இந்த அப்டேட்டில் 21 புதிய இமோஜிகள் இணைக்கப்பட்டுள்ளன.

❇️ புதிய 21 இமோஜிகள்

WAbetainfo மூலம் இந்த தகவல் வெளியானது. புதிய இமோஜிகள் உடன் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய ஸ்கின் டோன்களையும் இணைத்திருக்கிறது. தற்போது பீட்டா அப்டேட் பதிப்பில் 21 புதிய இமோஜிகளும் காட்டப்படுகிறது. 21 புதிய இமோஜிகளின் விவரங்கள் குறித்து மேலோட்டமாக பார்க்கலாம். 

வெளியான ஸ்க்ரீன் ஷாட்டின் படியே இந்த தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. ரோஸ் நிற ஹார்ட், லைட் ப்ளூ நிற ஹார்ட், லைட் பிளாக் நிற கார்ட், கழுதை, புறா, ஜெல்லி மீன், இஞ்சி, வைஃபை, பறவை முகம் என 21 இமோஜிகள் இடம்பெற்றிருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஹைஃபை குறியீடும் சரியாக வழங்கப்பட்டிருக்கிறது.

❇️ புதிய ஹைஃபை இமோஜி

இதுநாள் வரை ஹைஃபை என்றால் கையின் முன்புறம் காட்டப்படும் இமோஜியை தான் அனுப்பி இருப்போம். அது ஹைஃபை குறிக்கிறதா அல்லது போதும் நிறுத்து என்பதை குறிக்கிறதா என குழப்பம் ஏற்பட்டிருக்கும். இனி இந்த குழப்பம் தேவையில்லை. காரணம் சரியான முறையில் ஹைஃபைக்கு என்று தனி இமோஜி வழங்கப்பட்டிருக்கிறது. 

வலது புறத்தை பார்த்தபடி ஒரு கையும், இடது புறத்தை பார்த்தபடி ஒரு கையும் என இரண்டு கைகள் இருக்கிறது. இனி ஹைஃபை அனுப்ப வேண்டும் என்றால் வலது புறத்தை பார்த்திருக்கும் கையை அனுப்பலாம். அதற்குப் பதில் அளிக்கும் விதமாக இடது புறம் பார்த்த கையை அனுப்பினால் துல்லியமான ஹைஃபையை குறிக்கும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.