வைரஸினால், இலங்கையில் பொது முடக்கமா?

இலங்கையில் ஒமிக்ரோனின் கோரத் தாண்டவம் ஆரம்பமாகும் காலம் வெளியானது

சீனாவில் அதிதீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பி.எப்-7 ஒமிக்ரோன் திரிபு, இதுவரை இலங்கையை பாதிக்கவில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியரும், துறைசர்ந்த நிபுணருமான நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இதுவரை புதிய வகையான கொரோனா வைரஸ் அடையாளம் காணப்படவில்லை எனவும், பெருந்தொற்று பரவலுக்கான சாத்தியம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், புதிய வகையான பெரும் ஆபத்துமிக்க கொரோனா வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவுவதற்கு சாத்தியங்கள் இருப்பதாக துறைசர்ந்த நிபுணர் நீலிகா மாலவிகே எச்சரித்துள்ளார்.

எனவே, இலங்கையும் கொரோனா பரவல் தொடர்பில் அவதானமாக இருப்பதே சிறந்தது என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மற்றுமொரு பொதுமுடக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவாகவே காணப்படுவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் பிஎப்-7 ஒமிக்ரொன் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதலில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பொது முடக்கத்தை அமுல்படுத்தியும், தடுப்பூசி செலுத்தியும் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது.

சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தில் 2 பேருக்கம், ஒடிசாவில் ஒருவரும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபு வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.