திரிபோஷ வழங்குவதில் சிக்கல்.

𝑰𝑻𝑴 ✍️ மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்த்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ குழந்தைகளுக்கான திரிபோஷா உற்பத்திக்காக கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படும் சோளத்தில் அஃப்லாடொக்சின் அளவு அதிகரிப்பதால் இப் பிரச்சனை ஏற்பட்டுள்ளதக அவர் தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ எனினும் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் வைத்திய அதிகாரி அலுவலகங்களின் கோரிக்கைக்கு அமைவாக சிறுவர்களுக்கு திரிபோஷா விநியோகம் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சோளத்தில் உள்ள அஃப்லாடொக்சின் அளவு ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

𝑰𝑻𝑴 ✍️ ஆனால் இந்நாட்டில் கிடைக்கும் மக்காச்சோளம் குழந்தைகள் திரிபோஷ தயாரிப்பதற்கு ஏற்ற தரத்தில் இல்லை என திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ இந்நிலையால் குழந்தைகளுக்கு திரிபோஷா தயாரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து எதிர்காலத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ எவ்வாறாயினும் உலக உணவு ஸ்தாபனத்தின் ஊடாக திரிபோஷா மூலப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் தற்போது உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.