குதிகால் வெடிப்பால் அவஸ்தையா? இதனை தடுக்க இதோ சில அற்புத வழிகள்!

பொதுவாக உடலை தாங்கி பிடிக்கும் கால்களை அழகாக வைத்திருப்பது அவசியமானதாகும். இது ஆரோக்கியம் சார்ந்த விஷயமும் கூட.

இன்றைய காலத்தில் பலருக்கு குதிகால் வெடிப்பு பிரச்சினை என்பது சகஜமான விஷயமாக மாறிவிட்டது.

குதிகால் வெடிப்பு பிரச்சனையை சந்தித்துவிட்டால் பாதத்தில் வலியும் உபாதையும் சற்று அதிகமாகவே இருக்கும்.

குதிகால் வெடிப்பு வரும் போது ஆரம்பத்திலேயே அதை சரிசெய்ய வேண்டும் இல்லையெனில் அவை அதிகமாகி கால்களை அசிங்கமாக்கிவிடும்.

அந்தவகையில் குதிகால் வெடிப்பை சரி செய்ய என்ன மாதிரியான இயற்கை வழிகளை பின்பற்றலாம் என்பதை பார்ப்போம்.

வாழைப்பழத்தில் நன்கு கனிந்ததை கையால் நன்கு பிசைந்து, அதை பாதங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை, இரவு தூங்கும் முன் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

தேனை ஒரு கப் எடுத்து அதை ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலந்து  பின்பு பாதங்களை சுத்தமாக கழுவிவிட்டு, தேன் கலந்த நீரில் பாதங்களை 20 நிமிடம் ஊற வைத்து எடுக்க வேண்டும். பிறகு பாதங்களை நன்கு உலர்த்திவிட்டு, பாதங்களுக்கு மாய்ஸ்சுரைசரை தடவி வரலாம்.

வெஜிடேபிள் ஆயிலை இரவு தூங்கும் முன் சுத்தம் செய்த பாதங்களில் தடவி, கால்களில் சாக்ஸை அணிந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பு மறைந்துவிடும்.

 1 டீஸ்பூன் வேஸ்லினுடன் 4-5 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் நன்கு உலர்த்தி பின்னர் அந்த வேஸ்லின் கலவையை பாதங்களில் தடவி, சாக்ஸை அணிந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் சில நாட்கள் தொடர்ந்து செய்ய, குதிகால் வெடிப்பு ஓரிரு நாட்களில் காணாமல் போகும்.

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 5-6 துளிகள் வினிகரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து தனியாக வைத்து பின் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் பாதங்களில் அந்த பேஸ்ட்டை தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்ய குதிகால் வெடிப்பு நீங்கிவிடும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.