இலங்கையில் ஒரே நாளில் திருமணம் செய்துக் கொண்ட தாய் - தந்தை மற்றும் பிள்ளைகள்.

கண்டியில் திருமணமாகாமல் 35 வருடங்களை ஒன்றாக வாழ்ந்த தந்தையும் தாயும் ஆறு பிள்ளைகளைக் கொண்ட மகள் உட்பட பிள்ளைகள் பேரக்குழந்தைகளுடன் மேலும் 19 குடும்பங்கள் ஒரே நாளில் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.

யட்டிநுவர பிரதேச செயலகத்தின் குருகம என்ற கிராமத்தில் திருமணம் ஆகாமல் குழந்தைகளை வளர்த்து ஒன்றாக வாழ்ந்து வந்த இந்த 19 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குருகம ஸ்ரீ முருகன் கோவிலுக்கு வரவழைக்கப்பட்டு ஒரே நேரத்தில் நேற்று காலை இந்து முறைப்படி திருமணம் பதிவு செய்யப்பட்டது.

54 வயதான ஆறுமுகம் மற்றும் 52 வயதான சரஸ்வதிக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர், அவர்களின் திருமண நாளில், அவர்களின் மூத்த மகள் 34 வயது மரியாவும் 38  வயதான கமலாதாஸ் என்பவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு 6 பிள்ளைகள் உள்ளனர்.

கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தலைமையில் யட்டிநுவர பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திருமண பதிவு நிகழ்வு இடம்பெற்றது.

இந்த 19 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை ஒன்றாக வளர்த்தாலும், சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாமல், தேயிலைத் தோட்டம் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.