சர்ச்சைக்குரிய அட்டுலுகம சிறுமி கொலை l சந்தேகநபருக்கு எதிராக சட்ட மாஅதிபர் எடுத்த அதிரடி நடவடிக்கை.

 

பாணந்துறை – அட்டுலுகம பகுதியில் சேற்று நிலத்திற்குள் புதைத்து, மொஹமட் ஹக்ரம் பாதீமா அயேஷா என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக சட்ட மாஅதிபர், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

பாணந்துறை மேல் நீதிமன்றத்தில், சட்ட மாஅதிபர் இந்த குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாணந்துறை – பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் கடந்த மே மாதம் 27ம் திகதி சிறுமியொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பகுதியிலுள்ள சேற்று நிலத்திற்குள் புதைத்து, இந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருந்தமை விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.

சேற்று நீர், நுரையீரலுக்குள் சென்றமையே, சிறுமி உயிரிழப்புக்கான காரணம் என பிரேத பரிசோதனையிலிருந்து தெரியவந்தது.

இந்த நிலையில், குறித்த பகுதியைச் சேர்ந்த பள்ளி குட்டி என அழைக்கப்படும் பாஃரூக் மொஹமட் என்ற சந்தேகநபர், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எதிராக சட்ட மாஅதிபர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானது என கருதி, நீதவான் நீதிமன்றில் வழக்கை தாக்கல் செய்யாது, நேரடியாக மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபர் வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.