அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல.... உப்பும் விஷமாகும்!

உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்றொரு பழமொழி உண்டு. ஆனால், உப்பு அளவுக்கு மிஞ்சினால் உயிருக்கே ஆபத்தை தரும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சர்க்கரை நோயை பற்றியும், அதிக அளவிலான சர்க்கரை கேடு என்பதை மட்டுமே அடிக்கடி குறிப்பிடும் சத்தமில்லாமல் உயிரை கொல்லும் உப்பின் ஆபத்து குறித்து பலருக்கு தெரிவதில்லை.

❇️ பக்க விளைவுகள்.

நாம் அன்றாட சமையலில் பயன் படுத்தும் உப்பு உணவின் சுவையை அதிகரிக்கிறது, அத்துடன் அளவோடு சாப்பிடும் போது உடலையும் ஆரோக்கியமாக வைக்கிறது.

எனினும், உணவில் உப்பின் அளவு அதிகமானால், அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். உடலில் உப்பு கூடும் போது கால்சியம் இயல்பாகவே குறையும், என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

அதிக அளவு உப்பு கால்ஷியத்தை உறிஞ்சி விடும். இதனால், நமது எலும்புகள் வலுவிழந்து, மூட்டு வலி, ஆஸ்டியோபோரோஸிஸ் போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.

❇️ இதயம் தொடர்பான ஆபத்துக்கள்.

அதிக உப்பை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் இதயம் தொடர்பான நோய்களின் ஆபத்துக்கள் அதிகரிக்கும்.

மேலும், அதிக அளவிலான உப்பு சிறுநீரக பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.

அதிக உப்பை உட்கொள்வதால், சிறுநீரகங்கள் உடலில் இருந்து திரவங்களை வெளியேற்றுவது கடினமாகி சிறுநீரக பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

உப்பில் இருக்கும் ரசாயன பொருள்கள் உடலில் நீர்ச்சத்து, இரத்தத்தின் அளவு குறையாமல் இருக்கவும், இதயம் சீராக செயல்படவும் மிகவும் அத்தியாவசியமானது என்றாலும் உப்பின் அளவு அதிகரிக்கும் போது இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது.

❇️ உடல் பருமன்

உணவில் அதிக உப்பை உட்கொள்வது உடல் பருமனை அதிகரிக்கிறது. உப்பை அதிகமாக உட்கொள்வது உடலில் கலோரிகளை அதிகரிக்கிறது. இது உடல் கொழுப்பை அதிகரிக்கிறது.

உப்பு அதிகமாக உட்கொள்வதால் இரைப்பைக் கட்டிகளும் ஏற்படலாம் என நுபுணர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு தினமும் 2. 3 கிராம் அளவு உப்பு போதுமானது என்கின்றனர் மருத்துவர்கள்.

❇️ 5 கிராமுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.

தினமும் 5 கிராமுக்கு மேல் உப்பைப் பயன்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்துகின்றனர். ஆனால், நோயாளிகள், உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்து அளவை முடிவு செய்ய வேண்டும்.

ஊறுகாய், வத்தல் போன்ற அதிக உப்பு உள்ள பண்டங்களை குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே உப்பை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு சிறந்தது.

குறைவான உப்பை சேர்த்து கொள்வதை பழக்கிக் கொண்டால் நீண்ட நாட்கள் நாம் உடல் நலத்தோடு வாழலாம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.