இதுவும் கடந்து போகும்.

கொரோனா( தீநுண்மி) விசக் கிருமியிடமிருந்து மக்களைப் பாதுகாக்க தங்களது உயிரை நிகராக வைத்து மருத்துவர்களும், செவிலியர்களும், காவலர்களும், மிகக் கடுமையாக போராடிக் கொண்டு இருக்கின்றார்கள்...

மறுபுறமோ எந்தப் மெய்மையுமின்றி அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னம்பிக்கையற்ற மனிதர்களையும் இத்தகையத் தருணத்தில் நம்மால் காண முடிகிறது. (மெய்மை- அர்த்தம்)

தனிமையில் இருந்தால் மட்டுமே இந்தக் கொரானா (தீநுண்மி) யை விரட்டலாம் என அறிவுறுத்தியப் பிறகும், தனிமையில் வாழ்வதை தண்டனையாக நினைத்துக் கொண்டு, நேரத்தைப் பயனின்மையாக்குகின்றோம், சமூக வலைத்தளங்களில் வரும் கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டு விடுமுறைகளை பயனற்ற வகையில் கழித்துக் கொண்டிருப்பது தான் பெரும்பாலும் இன்று நடந்து கொண்டிருக்கிறது...(பயனின்மை- வீண்)

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று சிந்தித்துப் பார்த்தால் ஒன்று மட்டும் புலப்படுகிறது...

மனதில் தோன்றும் தேவையற்ற அச்சமும், அதனால் ஏற்படக்கூடிய எதிர்மறை எண்ணங்களும், மனதில் சுமைகளாக மாறி, தன்னம்பிக்கையற்ற சூழல் உருவாகி, அதனால் எதிர்மறையாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டேயிருக்கிறது...

கொரோனா என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு குணமாகிச் சென்றவர்கள் பற்றிய செய்திகளும் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கின்றன...

அத்தகைய குணமடைந்த மனிதர்கள் மருந்தால் மட்டும் குணமாகி விட்டார்கள் என்று நினைத்து விட வேண்டாம். மருந்துடன் சேர்ந்த மனஉறுதியாலும் தான் அத்தகைய மனிதர்கள் குணமாகியுள்ளார்கள்...

ஆம் நண்பர்களே...!

வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையும், தீமை நடந்தால் எதிர்த்து வெல்ல முடியும் என்ற துணிச்சலும் ஒவ்வொரு மனிதனுக்கும் வந்தால் தான், இந்த சமூகம் இன்றைய வழக்கத்திற்கு மாறான சூழலில் வெற்றி பெற இயலும்...

அத்தகையத் துணிச்சலைப் பெற வேண்டுமென்றால் தனிமையில் தன்னம்பிக்கையோடு வாழப் பழகுவோம்...!

கொரோனா போன்ற கொடிய நோயும் நம்மை விட்டுக் கடந்து போகும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு மனிதனின் மனதிலும் விதைப்போம்...!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.