விளையாட்டு சட்டத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்கள், விளையாட்டு சங்கங்களின் தேர்தல்களில் முன்னிலையாக முடியாத வகையில் விளையாட்டு சட்டத்தின் ஒழுங்குவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவான வர்த்தமானி அறிவித்தல், விளையாட்டுத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. நபர் ஒருவர் விளையாட்டு சங்கத்தின் அதிகாரியாகவோ அல்லது உறுப்பினராகவோ பதவி வகிக்கக்கூடிய உச்சபட்ச வயதெல்லை 70 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், தேசிய விளையாட்டு சங்கங்களில், தலா 4 ஆண்டுகள் என்ற அடிப்படையில், இரண்டு தடவைகள் தலைமைப் பதவி வகித்திருந்த ஒருவரை, மீளவும் தலைவர் பதவிக்கு நியமிக்க முடியாது என்றும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அது, குழுவின் உறுப்பினராக பதவியில் நீடிக்க தடையாக அமையாது என்றும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நான்கு தடவைகளுக்கு, தலா இரண்டு ஆண்டுகள் என்ற பதவி காலத்தை, அதாவது 8 ஆண்டுகள் தேசிய சங்கத்தில் பதவி வகித்திருந்தவர், மீளவும் தெரிவுசெய்யப்படுவதற்கு பொறுத்தமற்றவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், இந்த உத்தரவு அமுலாகும் காலத்தில், தேர்தலின் மூலம் தெரிவாகியுள்ள தலைவர் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகள், தாங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ள பதவி காலம் நிறைவடையும் வரையில், அந்தப் பதவிகளை வகிப்பதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.