உணவில் அதிகமாக காரம் சேர்த்துக்கொண்டால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன தெரியுமா?

பொதுவாக காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய் தான்.

நம் சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன

நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. இருப்பினும் இதனை அதிகம் எடுத்து கொள்வது உடலுக்கு ஆபத்தையே விளைவிக்கின்றது.

அந்தவகையில் உணவில் அதிகம் காரம் சேர்த்து கொள்வது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படும் என்பதை பற்றி இங்கே பார்ப்போம். 

அதிகம் சிவப்பு மிளகாய் எடுத்து கொள்வது வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும். இது தவிர சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவதால் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.

மிளகாய் பொடியை அதிகமாக உட்கொள்வது வாய் புண்களுக்கு வழிவகுக்கும். வாயில் காரத்தால் வெப்பம் அதிகரிக்கிறது, அதனால் வாயில் எரிச்சல் அதன் தொடர்ச்சியாக புண்களும் ஏற்படலாம். 

சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவது ஆஸ்துமா தாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அதே சமயம் காரமான உணவுகளை அதிக நேரம் சாப்பிடுபவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும். அதிக காரம் உடலின் நரம்புகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. 

சிவப்பு மிளகாய் பொடியை அதிகம் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, முன்கூட்டிய பிரசவத்தின் அபாயம் அதிகரிக்கிறது. மேலும் கர்ப்ப காலத்தில் சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவது குழந்தைக்கு சுவாச நோய்களை ஏற்படுத்தும்.

சிவப்பு மிளகாய் பொடியை அதிகமாக சாப்பிடுவது உங்கள் வயிற்றில் புண்களை ஏற்படுத்தும். 

சிவப்பு மிளகாயில் அஃப்லாடாக்சின் என்ற வேதிப்பொருள் காணப்படுவதால் வயிறு, கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.