காணி தகராறில் தம்பியின் தலையை வெட்டிய அண்ணன்!

𝑰𝑻𝑴 ✍️ இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட காணித்தகராறில் தம்பியின் தலையை அண்ணன் உடைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ நேற்று மொனராகலை – புத்தல பொலிஸ் பிரிவிட்கு உட்பட்ட யுதஹனாவ- பன்சல வீதி பிரதேசத்தில், இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ சாதாரணமாக இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், கரும்பு வெட்டும் கத்தியால் தம்பியின் தலையை அண்ணன் வெட்டியுள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

𝑰𝑻𝑴 ✍️ சம்பவத்துடன் தொடர்புடைய சகோதரர்கள் இருவரும் தமது பெற்றோரின் தான நிகழ்வுக்காக மற்றுமொரு சகோதரியின் வீட்டுக்குச் சென்றிருந்த போதே, இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இந்நிலையில் காயமடைந்த இருவரும் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, தம்பி ​மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலைக்கும் பின்னர் பதுளை வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருவதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

ADA DERANA

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.