மனதில் உறுதி வேண்டும்.

உடல் வலிமை பெற வேண்டுமானால் மனம் வலிமையுடன் இருக்க வேண்டும். மன உறுதி உடையவர்கள் நினைத்ததை எண்ணியவாறு அடைய முடியும்...

மன அமைதியைப் பொறுத்தே உங்கள் செயல் உறுதியடைகிறது. 

மன உறுதி உடையவர்கள் துன்பத்தில் துவண்டு விடுவதில்லை...

மனதில் உறுதி இருந்தால் மலைகளைக் கூடக் காலில் விழுந்து மண்டியிட வைத்து விடலாம். மன உறுதி இல்லாதவர் கூழாங்கற்களுக்கேக் கூட குனிந்து வணக்கம் சொல்ல வேண்டியிருக்கும்...

மன உறுதி படைத்தவர் எதிர்ப்பு, ஏளனம், இடையூறுகளை எதிர்த்து முன்னேறிச் செல்கின்றனர்...

குப்பைக் கழிவுகளை உரமாக்கிக் கொண்டு மலரவில்லையா

குண்டுமல்லிகள்...? காய்க்கவில்லையா கொய்யாக் கனிகள்...? 

வரும் சோதனைகளை உரமாக்கிக் கொண்டு வாழ்கிறவன் வாசலில் தான் நாளும் மாலைகள் அவன் கழுத்திற்காக காத்துக் கிடக்கும்..

மன உறுதி உடையவர்கள் துன்பத்தில் துவண்டு விடுவதில்லை. மனஉறுதி உடையவர்களால் தான் பிறர்க்கு உதவவும் முடிகிறது...

இந்தக் கருத்துக்களை உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இதுவரை பெற்ற வெற்றிகளுக்கு உங்கள் மன உறுதியே காரணம். இதுவரை ஏற்பட்ட சிக்கல்களுக்கு உங்களிடத்தில்

மன உறுதி இல்லாமையே காரணம் என்பதனை அறிவீர்கள்...

மன உறுதி தளர்ந்தால் - எவ்வளவு திறமை இருந்தாலும்

எவ்வளவு ஆற்றல் இருந்தாலும் அது பயனற்றதாகி விடும். எல்லோரையும் அயிர்ப்புக் கண்கொண்டு பார்க்க நேரிடும். எடுத்ததெல்லாம் தோல்வியில் முடியும்... (அயிர்ப்பு- சந்தேகம்)

மன உறுதி தளர்ந்த மனிதன் குனிந்தே நடப்பான்; வழியை விட்டு ஒதுங்கியே நடப்பான். ஒதுங்கி நடக்க நடக்க, உலகம் உங்களை ஒதுக்கி வைத்து விடும்...

ஆம் நண்பர்களே...!

ஒரு கருத்தினைப் புரிந்துக் கொள்ள வேண்டும். வெப்பத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை இல்லாவிட்டால் மத்தாப்புகளால் சுடர் விட்டு  ஒளிர்ந்திட இயலாது...

எனவே!, எந்த செயலானாலும் சரி, மனஉறுதியுடன் அதில் முனைப்புடன் செயல்படுவோம். வெற்றிக்கனி நம் கைகளில் விழும். தோல்விகள் நம் கால்களில் விழும்...!

ஆம்.. எப்பொழுதும் மன உறுதியை ஒருக்காலும் தளர விடக்கூடாது...!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.