Colombo Stars அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு.

LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய Playoff போட்டியில் Colombo Stars மற்றும் Kandy Falcons அணிகள் மோதின.

அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Colombo Stars அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய Kandy Falcons அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

Kandy Falcons அணி சார்ப்பில் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க 34 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பெற்றார்.

அதனடிப்படையில் Colombo Stars அணிக்கு 169 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Colombo Stars அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் சரித் அசலங்க 68 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

Colombo Stars அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

அதனடிப்படையில் Colombo Stars அணி நாளை இறுதிப் போட்டியில் Jaffna Kings அணியை எதிர்கொள்ளவுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.