COVID சட்டங்களில் திடீர் திருத்தங்கள்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருவோருக்கு விதிக்கப்பட்ட கொவிட் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொவிட் தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்காக கடந்த ஏப்ரல்  அமுல்படுத்தப்பட்ட பல சட்டங்கள் ரத்து செய்யப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

விமானம் அல்லது துறைமுகம் மூலம் இலங்கைக்கு வருபவர்கள் கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி அட்டையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இனி கிடையாது  என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்தில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டிற்குள் வருகைத் தருவதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டிய கொவிட் தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை அறிக்கையை இனி சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்த ஒருவர் நாட்டிற்குள் நுழைந்த பின்னர் கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த நபர் தனது சொந்த செலவில் 7 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.