கொரோனா பாதிப்பால் அதிகரிக்கும் ஞாபகமறதி.

கொரோனா வைரஸ் சுவாச மண்டலங்களை வெகுவாகப் பாதித்தது என்பது பரவலாகவே அறியப்பட்ட தகவல்தான் ஆனால், அது மனிதனின் அறிவாற்றல் செயற்பாட்டையும் பாதித்துள்ளது என்பது பலரும் அறியாத தகவலாகவே உள்ளது.

கொரோனா பாதித்த பலருக்கும் மூளையின் செயற்பாட்டில் ஒரு மந்தம் அல்லது சுணக்க நிலை இருப்பது தொடர்ந்து பதிவாகி வருகிறது. அதாவது, ஒரு தகவலை நினைவில் வைப்பது, ஒரு செயற்பாட்டில் கவனம் செலுத்துவது, தினந்தோறும் செய்யும் வேலைகளை நினைவூட்டுதல் போன்றவற்றில் சிக்கல்கள் இருந்தது பல தரப்பிலிருந்தும் கூறப்பட்டு வருகிறது

நீண்ட அல்லது கடுமையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரெய்ன் ஃபோக் எனப்படும் மூளை மந்த நிலை காணப்படுகிறது. ஒரு சிலருக்கு மாதக்கணக்கிலும் சிலருக்கு வருடக் கணக்கிலும் இந்த பாதிப்பு உள்ளது.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா வைரஸ் மூளையின் அறிவாற்றல் செயற்பாட்டை பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் 25 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினருக்குத்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதே ஆய்வில், காலப்போக்கில் நிச்சயம் இந்த குறைபாடு சரிசெய்யப்படும் என்றாலும், அறிவாற்றல் செயல்பாட்டில் முழுமையாக இந்த பாதிப்பு மேம்படுமா? என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறுகிய கால நினைவாற்றல் எனப்படும் செயற்பாட்டுத் திறனானது, அவ்வப்போது நடக்கும் செயற்பாடுகளை நினைவில் வைத்துக் கொள்வது, ஒரு பிரச்சினை வரும் போது அதனை எவ்வாறு சரி செய்வது என்ற யோசனையை தருவது, படிப்பது, பேசுவது அல்லது விவாதம் செய்யும் போது உடனுக்குடன் செயற்படுவது போன்றவற்றை உள்ளடக்கியது.

எனவே பலவீனமான நினைவாற்றல் செயற்பாடு ஒரு நபரின் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும்.

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திறன் படைத்தவர்கள் கூட, நீண்ட அல்லது தீவிர கொரோனா பாதிப்புக்குப் பிறகு அந்த திறனை இழந்துவிட்டதாகவே உணர்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.

பல்வேறு வகையில் மனிதர்களை பரிசோதித்து, அவர்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டு, இந்த ஆய்வு மேறகொள்ளப்பட்டுள்ளது. கொரோனாவுக்குப் பிறகு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகள், பொதுவான கேள்வி பதில்கள் என இதில் பல சோதனைகள் அடங்கியிருந்தன. இதில் 5,400 பேர் பங்கேற்றனர்.

பிரிட்டனில், ஹல் பல்கலைக்கழகம், யோர்க் ஹல் பல்கலைக்கழகம் இணைந்து இந்த ஆய்வினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.