Kandy Falcons அணி அபார வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று (13) இடம்பெற்ற Dambulla Aura மற்றும் kandy Falcons அணிகளுக்கிடையிலான போட்டியில் 77 ஓட்டங்களால் kandy Falcons அணி வெற்றிபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற kandy Falcons அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய kandy Falcons அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்களைப் பெற்றது.

kandy Falcons அணி சார்பாக கமிந்து மெண்டிஸ் 58 ஓட்டங்களையும், என்ரூ பிளட்சர் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பிரமோத் மதுஷான் மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

194 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய Dambulla Aura அணி 14 ஓவர்கள் 2 பந்துகளில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 114 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

Dambulla Aura அணி சார்பாக சதுரங்க டி சில்வா 25 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.