ஆஸ்கா் ஒட்டுமொத்த பட்டியலில் 10 இந்திய திரைப்படங்கள்.

ஆஸ்கா் விருதிற்கான ஒட்டுமொத்த பட்டியலில் RRR, காந்தாரா, கங்குபாய் கதியாவாடி, இரவின் நிழல், ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் (Rocketry: The Nambi Effect), தி காஷ்மீா் ஃபைல்ஸ் (The Kashmir Files) உள்ளிட்ட இந்திய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

95-ஆவது ஆஸ்கா் விழா மாா்ச் 12 ஆம் திகதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது. 10 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. அந்த விழாவிற்காக இந்தியா சாா்பில் குஜராத்தி மொழி திரைப்படமான ‘செல்லோ ஷோ’ அதிகாரபூா்வமாக பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்கருக்கான ஒட்டுமொத்த பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 301 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் இருந்து செல்லோ ஷோ, RRR, காந்தாரா, கங்குபாய் கதியாவாடி, தி காஷ்மீா் ஃபைல்ஸ், இரவின் நிழல், ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட், மே வசந்த்ராவ், துஜ்யா ஸாட்டி காஹி ஹி, விக்ராந்த் ரோனா ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும், ஒட்டுமொத்த பட்டியலில் இடம்பெற்றால் அவை விருதிற்கான அடுத்தகட்ட பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ஆஸ்கா் விருதிற்கான தெரிவுப் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த சா்வதேச திரைப்படத்திற்கான தெரிவுப் பட்டியலில் ‘செல்லோ ஷோ’ இடம்பெற்றுள்ளது. RRR திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலானது சிறந்த பாடலுக்கான தெரிவுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

சிறந்த ஆவணப் படத்திற்கான தெரிவுப் பட்டியலில் ‘All That Breathes’, சிறந்த ஆவண குறும்படத்துக்கான பட்டியலில் தமிழில் எடுக்கப்பட்ட ‘The Elephant Whisperers’ ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் ஆஸ்கா் விருதிற்கான 5 சிறந்த படைப்புகள் அடங்கிய பரிந்துரைப் பட்டியல் எதிர்வரும் 24 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. 

அனைத்து பிரிவுகளுக்குமான விருதுகள் அறிவிப்பு லாஸ் ஏஞ்சல்ஸில் மாா்ச் மாதம் 12 ஆம் திகதி நடைபெறும் விழாவில் தெரிய வரும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.