இளநீரால் இலங்கையில் குவியும் டொலர்.

டுபாய் சந்தையில் இலங்கையின் இளநீர் தேவை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க தெரிவித்துள்ளார்.  

இலங்கைக்கே உரித்தான இளநீருக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் அதிக தேவை காணப்பட்டாலும் கடந்த காலங்களில் இளநீர் ஏற்றுமதி தொடர்பான பல பண பரிவர்த்தனைகள் உண்டியல் ஊடாக மேற்கொள்ளப்பட்டமையினால் நாடு பெருமளவு அந்நியச் செலாவணியை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னை அபிவிருத்தி அதிகார சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டில் இளநீர் ஏற்றுமதிக்கான ஒழுங்குமுறை முறைமை ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒரு இளநீர் தற்போது 0.8 டொலர்களுக்கு ( 296 ரூபாய்) அந்நாட்டு துறைமுகத்தில் பெறப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையின் இளநீர் டுபாய் சந்தையில் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் இளநீர் ஒன்று அந்நாட்டின் கரையோரப் பகுதியில் 2500 ரூபாவிற்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெளிநாட்டு சந்தையில் இளநீருக்கான தேவை மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக இலங்கை சந்தையிலும் இளநீர் விலை அதிகரிக்கலாம் என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வாரத்திற்கு சுமார் 252,000 இளநீர் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

2022ஆம் ஆண்டு இளநீர் ஏற்றுமதி மூலம் இரண்டு பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் வருமானம் 06 பில்லியன் ரூபா எனவும் தெரியவந்துள்ளது.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.