இலங்கையில் அச்சுறுத்தும் 2 ஆபத்துக்கள்!

இலங்கையின் சில பகுதிகளில் எலிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 22 வயது யுவதியொருவர் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

இதுவரை குறித்த வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலுக்குள்ளான 21 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பதுளை பொது வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் கயான் குரே தெரிவித்துள்ளார்.

பதுளை - கைலகொட பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுவதி உயிரிழந்த பிரதேசத்தில் பலருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதார அதிகாரிகள் குறித்த பிரதேசத்தில் எவ்வித டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

 இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு எலிக்காய்ச்சலுக்கு உள்ளான 50 வயதான ஒருவர் பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் எலிக்காய்ச்சலுக்கு உள்ளான பலர் இங்கு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.