பொலிஸாருக்கு வந்த தடை. இனி சோதனை செய்யமுடியாது.

பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை சோதனையிடும் நடவடிக்கையல் பொலிஸாரை ஈடுபடுத்தவேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

களனி - சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி எந்தவொரு பாடசாலை மாணவர்களினதும் புத்தக பைகளை சோதனையிட வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அது பாடசாலைகளுக்கு உரித்தான பொறுப்பு என தெரிவித்த அவர், பாடசாலைகளில் போதைப்பொருள் தொடர்பான சோதனைகளை நிர்வாகம், பெற்றோர், பழைய மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.