பூட்டிய வீட்டிலிருந்து 5 குழந்தைகள் உட்பட 8 பேரின் சடலங்கள் மீட்பு.

அமெரிக்காவின் உதா மாகாணத்தில் சோல்ட் லேக் சிட்டி உள்ள குடியிருப்பில் உள்ளவர்களின் நலனுக்கான பரிசோதனையில் ஈடுபடுவதற்காக அதிகாரிகள் சென்றனர்.

அப்போது ஒரு வீட்டுக்கு சென்றபோது அந்த வீட்டில் 5 குழந்தைகள் உட்பட 8 பேர் மர்மமான நிலையில் இறந்து கிடந்தனர். தகவல் அறிந்து சென்ற பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு என்பது அன்றாடம் நடைபெறும் சம்பவமாகி விட்டது. அங்கு பொதுமக்கள் கூடும் வியாபார நிலையங்கள், பாடசாலை மற்றும் கல்லூரிகள் என பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.