மனநிறைவு என்பது யாதெனில்.

மனநிறைவு என்பது அடுத்தவரின் எண்ணத்தில் இருந்து வர வேண்டியது இல்லை. அது தனக்குள்ளேயே இருந்து வர வேண்டும்.

அடுத்தவருக்காக வேலை செய்வதில் கிடைக்கும்

இன்பத்தை விட, தன் மனநிறைவிற்காக வேலை செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியே நிலையானது...!

அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்ய வேண்டாம். நம் மனநிறைவிற்காக வேலை செய்ய வேண்டும்.

மனநிறைவு என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம்; ஆடம்பரம் என்பது நாமே தேடிக் கொள்ளும் வறுமை என்றார் கிரேக்க அறிஞர் சாக்ரட்டீஸ்...

இந்த உலகத்தில், ஒருவரே எல்லாவற்றையும், தன் வாழ்நாளில் ஒழுங்கு படுத்திட இயலாது. அது தேவையற்றதும் கூட, மலையைத் தலையால் முட்டி உடைக்க முடியாது. ஆனால், சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும்.

எந்த செயல் செய்தாலும், முழுமையான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக, ஒரு வேலையைச் செய்வதை விட, அதைச் செய்யாமல் இருப்பதே மேல்...!

எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும், செய்யும் வேலையைக் காதலியுங்கள். ஈடுபாட்டுடன் காட்டிய வேலை, மனநிறைவை மட்டுமல்ல, நல்ல பட்டறிவையும் உங்களுக்குக் கொடுக்கும்...(பட்டறிவு- அனுபவம்)

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில், விளையாட்டுக்கு இடம் ஒதுக்குங்கள். கோவிலுக்குச் செல்வதை விட, கால்பந்து விளையாடுவது மேலானது என, விவேகானந்தர் கூறியிருக்கிறார்...

விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் உற்சாகம் தரும்...!

ஆம் நண்பர்களே...!

நிறைவான உறக்கம், ஓய்வு, உணவு , பொழுதுபோக்கு இவற்றை சிறப்பாக நீங்கள் திட்டமிட்டு கடைபிடித்தாலே, உங்களை விட யாரும் மனநிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்து விட முடியாது...!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.