கல்வி அமைச்சின் புதிய திட்டம்!

பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதில் புதிய முறையை அறிமுகப்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2 முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், 6 முதல் 11ஆம் வகுப்பு வரையிலும் அமுலுக்கு வரும் இத்திட்டம், ஒரு மாதத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும்.

இதன்படி, மாணவர்களை உள்வாங்குவதற்கு பெற்றோர்கள் விண்ணப்பிக்கும் வாய்ப்பை வழங்கும் வகையில், அடுத்த தவணை முதல், புதிய முறை நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் கூறினார்.

புதிய திட்டத்தின் கீழ், மாகாண பாடசாலைகள் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கு இரண்டு நடைமுறை பின்பற்றப்படும். தற்போதுள்ள சுற்றறிக்கை விதிகளை மேலும் நெறிப்படுத்தவும், நியாயமான மற்றும் சமமான அணுகுமுறைகளை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்மொழியப்பட்ட முறையின் கீழ் விண்ணப்பித்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஏற்படும் வெற்றிடங்களில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வெற்றிடங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்க வழக்கமான முறைமை பின்பற்றப்படும்.

நேர்முகத் தேர்வு அந்தந்த பாடசாலை அதிபர்களால் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.