மாறுவோம்...! மாற்றுவோம்.

நம்மிடம்  உள்ள ஆயிரம் குறைகளை மறைத்து விட்டு மற்றவர்கள் திருந்த வேண்டும் என்றால் அங்கு மோதல்கள் தான் உருவாகும். மாற்றம் வேண்டும், உண்மையில் நாம் விரும்பினால் மாற்றம் நம்மிடம் இருந்து தான் துவங்க வேண்டும்...

நாம் நம்மை மாற்றிக் கொள்ளாதவரை, வெளியில் மாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்பதை உணர வேண்டும், மாற்றம் என்பது உடனே நிகழ்வதில்லை. சிறிது சிறிதாகத் தான் மாற்றம் காணும். 

முதலில் நாம் மாற வேண்டும். நம்மைப் பார்த்து நமது நண்பர் மாறுவார், அவரைப் பார்த்து அவரது நண்பர் என ஒவ்வொருவராக மாறுவர், ஒரு சில அல்லது பல வருடங்களில் எல்லோரும் மாறி இருப்பார்கள். இதற்கான முதல் துவக்கத்தை நாம் தான் தர வேண்டும்...

ஆனால்!, நாம் யாரும் மாற விரும்புவதில்லை, மற்றவரையே மாற்ற விரும்புகிறோம்.

அரசு மதுக்கடை (டாஸ்மார்க்) மூடச் சொல்லிப் பிரச்சாரம் செய்கிறோம்.நம்மில் எத்தனை பேர் மது அருந்துவதில்லை...?

பொய் வாக்குறுதிகள் தந்து பித்தலாட்டம் ஆடுவதாய் அரசியல்வாதிகளைச் சாடுகிறோம்...? நம்மில் எத்தனைப் பேர் பொய் பேசுவதில்லை...?

எவரோ சொத்துக் குவித்து விட்டதாய் புலம்புகிறோம். நம்மில் எத்தனை பேர் வீட்டுமனைகள் ஒன்றுக்கு மேல் வாங்கவில்லை...?

இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தார்கள் என்று குற்றம் சுமத்துகிறோம். நம்மில் எத்தனைப் பேர் நெகிழிப் (பிளாஸ்டிக்) பைகள் பயன்படுத்துவதில்லை...?

சாதி அரசியல் குறித்து விமர்சிக்கிறோம்.

நம்மில் எத்தனை பேர் சாதி மறுத்து வாழ்கிறோம்...?

அரசியல்வாதிகளை நம்பிக்கை துரோகிகள் என்கிறோம்.

நம்மில் எத்தனைப் பேர் நம்மிடம் அன்பு செய்தவர்கள் நம்பிக்கையைக் குலைத்ததில்லை...?

சாக்கடையாய்ப் போனது அரசியல், மதம், சாதி மட்டுமல்ல சமூகமும் தான்.. .!

ஒவ்வொருவரும் மற்றவரை மாற்றியமைக்க முயல்கிறோம். அவர் மாற வேண்டும் இவர் மாற வேண்டும் என்று, இவர்கள் எல்லாம் தன்னை மாற்றிக் கொள்ளாதவரை எந்தவொரு பயனும் எவருக்கும் இல்லை...

மாற்றத்தை விரும்பினால் நாம் மாற வேண்டும். அதனை மற்றவர்கள் பின்பற்றச் செய்வோம். மாற்றம் நம்முள் நிகழாதவரை வெளியில் மாற்றம் இல்லை...

ஆம்.,நண்பர்களே...!

உலகில் உள்ளவர்களை மாற்ற வேண்டும் என்றால் முதலில் நாம் மாற வேண்டும்...!

நாம் மாறுவதாய் இருந்தால் தான் உண்மையான மாறுதல் ஏற்படும்...!!

மாற்றம் நம்மில் இருந்து முதலில் தொடங்க வேண்டும்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.