இலங்கையில் அடுத்து அழிய போகும் உயிரினம்.

இலங்கையில் கிட்டத்தட்ட 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக இலங்கையின் பல்லுயிர்ச் செயலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இலங்கையானது 435 வகையான பறவையினங்களைக் கொண்ட பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய இடமாக இருப்பதாகவும் 2022 ஆம் ஆண்டின் சிவப்பு தரவுப் புத்தகத்தில் நாடு தழுவிய ஆய்வின் போது இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பல்லுயிர் பெருக்க செயலகத்தின் இயக்குனர் ஆர்.எச்.எம்.பி. அபேகோன் தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் தங்கள் வாழ்விடங்களை சேதப்படுத்துவதால் பறவைகள் அழியும் அபாயத்தை எதிர்கொள்வதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

ரெட் டேட்டா புக் என்பது அழிந்து வரும் மற்றும் அரிய வகை தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூஞ்சைகள் மற்றும் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் சில உள்ளூர் கிளையினங்களைப் பதிவு செய்யும் பொது ஆவணமாகும். அப்புத்தகத்திலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.