வெங்காயத்தோலில் உள்ள சூப்பர் நன்மைகள். இனி தூக்கி வீசாதீர்கள்!

வெங்காயத்துக்கு நமது சமையலில் அதிக முக்கியத்துவம் உள்ளது. பல வகையான உணவு வகைகளை சமைக்க இது பயன்படுத்தப்படுகின்றது.

இது உணவின் சுவையை கூட்டுகிறது. அதுமட்டுமல்லாது வெங்காயத்தின் விலை உயர்ந்தால் அது நாட்டில் பெரிய பிரச்சனையாகவே மாறிவிடும்.

வெங்காயத்தை உரித்த பிறகு, அதன் தோலை பயனற்றது என்று நினைத்து குப்பைத் தொட்டியில் வீசுகிறோம். ஆனால் அதன் நன்மைகள் பற்றி நீங்கள் அறிந்தால், ஒருபோதும் அவ்வாறு செய்ய மாட்டீர்கள்.

📌வெங்காயத் தோலின் நன்மைகள்

❇️கண்பார்வையை சீராக்கும்

வெங்காயத் தோலில் வைட்டமின் ஏ ஏராளமாக உள்ளது. இது கண்பார்வையை அதிகரிக்கச் செய்கிறது மற்றும் மாலைக்கண் போன்ற நோய்களைத் தடுக்கிறது.

இதற்கு வெங்காயத்தோல் தேநீர் தயாரித்து அருந்த வேண்டும். இதனால் சருமத்தின் தன்மையும் மேம்படும்.

❇️ நோய் எதிர்ப்பு சக்தி

வெங்காயத் தோலில் வைட்டமின் சி-யும் இருக்கிறது. இதன் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது வைரஸ் தொற்று அபாயத்தைக் குறைக்கிறது.

❇️ ஆரோக்கியமான கூந்தல்

கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெங்காயத் தோலை பயன்படுத்தலாம். இதற்கு வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு சுமார் ஒரு மணி நேரம் கழித்து இந்த நீரில் தலையை அலசவும்.

இதனால் கூந்தல் உதிர்தல் பிரச்சனை நீங்கும்.

❇️ இதய நோயாளிகளுக்கு  

வெங்காயத்தோல் இதய நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இதற்கு வெங்காயத் தோலைக் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு வெந்நீரில் கொதிக்க வைக்கவும். அதன் பின் அதை வடிகட்டி அந்த நீரை குடிக்கவும்.

இந்த நீரை குடித்து வந்தால், இதய நோய் வரும் வாய்ப்பு குறைகிறது.

❇️ தொண்டைப் புண்.

வெங்காயத் தோல்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொப்பளித்தாலோ அல்லது தேநீரில் கொதிக்கவைத்து குடித்தாலோ, அது தொண்டை புண் மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும் என்றும் சொல்லபப்டுகின்றது.    

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.