பணியாளர்களின் மகிழ்ச்சியே.

ஒரு நிறுவனத்தின் வெற்றியானது அது எவ்வாறு தன்னுடைய ஊழியர்களை எப்படி நடத்துகின்றது என்பதில் தான் அடங்கி இருக்கின்றது...

ஒரு நிறுவனத்தின் வெற்றியைத் தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் இருந்தாலும், இதுவே மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது...

நிறுவனங்கள், தங்களுடைய பணியாளர்கள் தான் தங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய சொத்து என்பதை உணர்ந்து அவர்களை அங்கீகரித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்...

ஒரு நிறுவனத்தில் பணியாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது தான் நிறுவனம் நன்கு செயல்படும். மற்றும் உற்பத்தியும் பெருகும்...

தங்கள் கடமையில் கண்ணும் கருத்தாக இருக்க வேண்டும் என்று பணியாளர்களும், கடமையை செய்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளும், புரிந்துக் கொண்டு செயலாற்றினால் எங்கும் நல்லதே நடக்கும்...

ஒரு நிறுவனத்திற்குக் கீழ் வேலை செய்யும் அதிகாரி என்பவர் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் கோபம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்...

பணியாளர்களை ஊக்குவித்தால், ஆரோக்கியமான உறவைப் பணியிடத்தில் உருவாக்கலாம்...!

மற்றும் வேலையில் மனநிறைவு, மகிழ்ச்சி இருக்கும் பணியாளர்கள் மட்டுமே அந்த நிறுவனத்திற்கு நன்கு உழைத்து நிறுவனத்தை ஆதாயம் அடையும் சிறந்த நிறுவனமாகக் கொண்டு வருவார்கள்...

பணியாளர்களின் சொந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனங்கள் பணியாளர்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெறுகின்றன...

அங்கு தொடர்ந்து பணிபுரிய அவர்கள் விரும்புகிறார்கள். விலக விரும்புவதில்லை. நிறுவனங்களுக்கு மிகவும் ஏற்புடையவர்களாக இருப்பார்கள்...

இது நிறுவனங்களுக்கும் ஒரு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுப்பதுடன் புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பது, அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது போன்ற வேலைகள் குறைகின்றன...

அலுவலகத்தில் திறமையாளர்கள் அதிகரிக்கின்றனர். அவர்களிடையே நிலவும் நேர்மறை எண்ணங்கள் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன...

ஆம் நண்பர்களே...!

மகிழ்ச்சியான பணியாளர்கள் எங்கு இருக்கிறார்களோ அந்த நிறுவனம் நன்றாக முன்னேறுகிறது என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது...!

பணியாளர்கள் நிதி நிலைமையாகவும், மன நிலைமையாகவும், உடல்நல நிலைமையாகவும், குறை இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சியாக தத்தம் பணிகளை செய்து நிறுவனத்தை நல்ல முறையில் இயங்க வைப்பார்கள்...!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.