பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் இதற்கு தடை!

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் இனிப்பு பானங்கள் மற்றும் கோதுமை மா பாவனையை தடை செய்வதற்கும் அரிசி மாவுடன் தயாரிக்கப்படும் உணவுப் பாவனையை அதிகரிப்பதற்கும் வேலைத்திட்டமொன்றை வகுக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கான திட்டத்தை வகுப்பதற்கு சுகாதார, கல்வி மற்றும் விவசாய அமைச்சுகளின் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் கோதுமை மாவுக்கு பதிலாக அரிசி மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்தும், அரச அலுவலகங்களில் அதை அமுல்படுத்துவது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது.

இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கருத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு பெரும்போக செய்கை பாதிக்கப்பட்டமையால், 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 400 மில்லியன் டொலர் செலவில் 08 இலட்சம் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.