உலகிலேயே மிகவும் பெரிய வாழைப்பழம் கண்டுபிடிப்பு! எங்கு தெரியுமா?

உலகிலேயே மிகவும் பெரிய வாழைப்பழம் பப்புவா நியூகினியா எனும் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பப்புவா நியூகினியா என்ற நாட்டில் உலகிலேயே மிகப் பெரிய வாழைப்பழம் வளர்ந்துள்ள நிலையில் இந்த வாழைப்பழங்களை உருவாக்கும் வாழை மரங்களை 'ஆரளய ஐபெநளெ' எனும் பெயரில் அழைக்கப்படுகிறது.

இந்த பழங்கள் மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிகமாக விளைகிறது. இதனை எல்லாம் விட பப்புவா நியூ கினி எனும் நாட்டில் தான் அதிக உயரமாக வளர்கிறது.

மேலும் இந்த வாழை மரங்கள் 15- 30 மீட்டர் வரை வளர்கிறது என்றும் இதிலுள்ள வாழை இலைகள் 5 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வாழைமரங்களை வீட்டில் வளர்க்க பலர் முயற்சி செய்துள்ளார்கள். ஆனால் அது பயனற்றதாய் சென்றுவிட்டதாம்... காரணம், இந்த மரங்கள் வெப்பமண்டலத்தில் தாழ்வான நிலத்தில் வளராது.

இதனை தொடர்ந்து இந்த மரங்கள் மேட்டுப்பகுதியில் அதுவும் பகலில் குளிர்ச்சியான, இரவில் ஈரமான மற்றும் சூடான மிதமான காலநிலை இருந்தால் மாத்திரமே வளரக்கூடியது.

இதனால் தான் இந்த வாழை மரங்கள் பப்புவா நியூகினி நாட்டில் மட்டும் அதிகமாக விளைகிறது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.