கல்விச் சுற்றுலாக்களுக்கு புதிய நிபந்தனைகள்

கல்விச் சுற்றுலாக்களில் ஈடுபடும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, பயணத்தின் தூரத்தை அதிகபட்சமாக 100 கிலோமீற்றராக மட்டுப்படுத்தி, மாலை 6 மணிக்குள் பாடசாலைகளுக்குத் திரும்புவதற்கான நிபந்தனைகள் கல்விப் பயணங்கள் தொடர்பான சுற்றறிக்கையில் உள்ளடக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் பயணிக்கக் கடினமான தூரத்தை கல்விப் பயணத்துக்கு பயன்படுத்துவது நடைமுறைச் சாத்தியமில்லை என்றும் இனிமேல் பயணங்களுக்கு ஏற்ற இடங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

மாணவர்களின் பாதுகாப்புக்காக தற்போது பின்பற்றப்படும் ஏனைய ஏற்பாடுகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், முதல் பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.