புதிய ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் - கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

போட்டிப் பரீட்சையின் மூலம் பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்பை கல்வி அமைச்சு விடுத்துள்ளது.

இந்த மாத இறுதியில் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றிக் கொண்டிருக்கும் பட்டதாரிகள் உட்பட நாற்பது வயதுக்கு குறைந்த பட்டதாரிகள் அனைவரும் இதற்காக விண்ணப்பிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் மற்றும் 12000 ஆசிரியர்களின் ஓய்வு என்பவற்றின் அடிப்படையில் 22000 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான போட்டிப் பரீட்சைகளை விரைவாக நடாத்தி விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் அழகியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களை புதிதாக உள்வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.