இலங்கையில் பஸ் கட்டணம் குறித்து எடுக்கப்பட்டுள்ள இறுதி முடிவு!

நாட்டில் இருமுறை 25 ரூபாவினால் டீசல் விலை குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார்.

பணியாளர்களுக்கான வேதனத்தை வழங்குதல் மற்றும் சகல தனியார் பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் காரணமாக வருவாய் வீழ்ச்சியடைந்துள்ளமையால் தங்களது தொழில்துறை பாதிப்படைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது சாதாரண பேருந்து சேவைகளுக்கான கட்டணத்தை குறைக்க முடியாத நிலை காணப்படுகிறது.

கொரோனா காரணமாக அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டணத்தை வருடாந்த கட்டண திருத்தத்தின்போது அமைச்சர் குறைத்திருக்க முடியும்.

இருப்பினும், அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பன குறித்த செயற்பாட்டை முன்னெடுத்திருக்கவில்லை.

கடந்த காலங்களில் எரிபொருள் குறைவாக காணப்பட்ட நிலையில் சேவையில் ஈடுபட்ட சில பேருந்துகள் அதிகளவான வருவாயை ஈட்டியிருந்தன.

இதன்போது பேருந்து பணியாளர்களும் அதிக வேதனத்தை பெற்றதுடன் தற்போது அந்த தொகைக்கே பணியாற்றுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.