அடுத்த வாரம் முதல் முட்டை இறக்குமதி செய்யப்படும்.

நாட்டிற்கு அடுத்த வாரம் முதல் முட்டை இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு செல்வதற்கு பணம் இல்லை என ஆளும் கட்சியினர் பலர் கூறிவரும் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் முட்டை ரூ. 40/- முதல் ரூ. 42/-.இற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

முட்டைகளை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் வர்த்தக அமைச்சில் நேற்று மாலை இடம்பெற்றது.

இந்தகலந்துரையாடலில் முட்டைகளின் அளவு, தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள், விலை மற்றும் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் ஊடாக முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

 உள்நாட்டுத் தேவையில் 20% இறக்குமதி செய்யப்படும் என்றும், இறக்குமதிக்குத் தேவையான நிதி அமைச்சிடம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், முட்டையை இறக்குமதி செய்வதற்கான தீர்மானத்தை அரசாங்கம் முன்னெடுத்தால், உள்ளூர் உற்பத்தியாளர்கள் தொழிலில் இருந்து விலகிச் செல்வார்கள் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

முட்டைகளை இறக்குமதி செய்வது உள்ளூர் தொழில்துறைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார் .

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.