குளிர்காலத்தில் சுடுதண்ணீர் குளியல் சுகமாக தான் இருக்கும்! ஆனால்... அதில் உள்ள தீமைகள்.

தினமும் சுடுதண்ணீரில் குளிக்கும் பழக்கும் பலருக்கு உள்ளது.

உண்மையில் வெந்நீர்க் குளியல் உடலுக்கு நன்மை செய்வதை விட தீமைகளையே அதிகம் செய்கின்றன

உங்கள் சருமம் மென்மையாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி சுடு தண்ணீரில் குளிப்பதை தவிர்த்துவிடுங்கள். வெந்நீரில் குளிக்கும் போது சருமத்தின் ஈரத்தன்மை குறைந்துவிடும்

❇️ தூக்கம்.

சுகமான தூக்கத்தைக் கலைக்க வெந்நீர்க் குளியல் தான் சிறப்பு என்று நினைப்பது தவறு. குளிக்கும் போது சுகமாக இருக்கும், உடல் மனம் எல்லாம் தளர்ச்சி அடைந்து ரிலாக்ஸ் ஆகும். ஆனால் குளித்து முடித்தவுடன் மீண்டும் தூக்கம் வரும். குட்டியாக ஒரு தூக்கம் போடலாம் என்று உடல் கோரும். புத்தம் புதிய நாளின் துவக்கத்தில் உங்களை படு சோம்பேறியாக்கிவிடும்.

மழைக்காலத்திலும் பனிக்காலத்திலும் சுடுதண்ணீர் குளியல் சுகமாகத் தான் இருக்கும். அப்படியே பழகிவிட்டால் உடல் அதற்கு அடிமையாகிவிடும். அதன் பின் வரும் வெயில் காலத்தில் கூட பலர் வெந்நீரில் தான் குளிப்பார்கள். பழக்கம் தான் காரணம்.

❇️ அரிப்பு பிரச்சனை

குளிப்பதற்கு வெந்நீரைப் பயன்படுத்தும் போது, ​​அது கண்களில் உள்ள ஈரப்பதத்தைக் குறைக்கும். இது கண்களில் அரிப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

எல்லோரும் இளமையாக தோற்றமளிக்கும் சருமத்தை விரும்புகிறார்கள், ஆனால் தொடர் சுடுநீர் குளியல் உங்கள் சருமத்தை சுருக்கமாகவும், மிகவும் சீக்கிரம் கடினமாகவும் மாற்றும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.