உயர்தரப் பரீட்சை தொடர்பில் அதிகாரிகளுக்கு பிரதமர் விடுத்த உத்தரவு!

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை குறித்த அனைத்து ஏற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானிக்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சில் மாவட்ட செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சை சுமூகமான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு மாவட்டச் செயலாளர்களை விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் பரீட்சைகள் ஆணையாளருக்கு மாத்திரம் பொறுப்புகள் வழங்கப்படக்கூடாது.கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் உட்பட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களுடனும் ஒற்றுமையாகச் செயற்படுமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதில் தாமதத்தை எதிர்கொள்வார்கள். பல்வேறு சூழ்நிலைகளால் பரீட்சை ஏற்கனவே தாமதமாகி வருவதை எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் பல சிரமங்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாகவும், கல்வித் துறையின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.