இறுமாப்பு.

இறுமாப்பு எளியவனைப் பார்த்து கொள்ளாதே.

வென்றவன் தோற்றவனைப் பார்த்து இறுமாப்பு அடைவது அறிவீனம்.

வெற்றி தோல்வி என்பது நிரந்தரமற்றது.

இன்றைய வெற்றியாளன் நேற்று தோற்றவனாகவோ

நாளை தோற்பவனாகவோ  மாறலாம்.

காற்று அடித்துச் செல்லும் சருகு மாதிரி.

முயல்வது ஒன்றே உன் வேலை

முடிவு

அதன் வேலை.

இதில்

நான் பெரியவன்

நீ சிறியவன் என்பது

ஏற்புடையதல்ல.

அடுத்தவன் மனதை

புண்படுத்துவது

கொடூர செயல்.

நீ

வென்றதன் பலனையே

இழந்து விட்டாய்.

ஆம்

வெற்றி உன்னை

நிலைகுலைய வைத்துவிட்டது.

ஆணவத்தின் உச்சியில் 

ஏற்றிவிட்டு

குப்புறத் தள்ளப் பார்க்கிறது.

விழுந்தால்

என்ன மிஞ்சும்?

எதற்கு இந்த வஞ்சம்.

இறுமாப்பு

உன்னையே உனக்கு

மறைக்கும்.

மற்றாரால்

வெறுக்க வைக்கும்.

பாராட்டும் தன்மையே

பறந்து போய்விடும்

பணிவு என்ற

மனித சொத்து

உன்னை விட்டு நீங்கியபின்

மண்ணில் உனக்கு என்ன வேலை?

அகங்கெட்டு

அகஙகாரத்தில் இருக்கும் நீ

அதை

அலங்காரம் என்று எண்ணுகிறாய்

அவமானம் அது.

உடனிருப்போரை

அணைத்துச் செல்லத்

தெரியாத நீ

ஆபத்தை

விலை கொடுத்து வாங்குகிறாய்.

வாழும் நாள் மிக மிகக்

குறைவு

இதில்

உண்மையை தேடி அடங்கவே

உள்ள நாள்

பற்றாத போது

இறுமாப்பு பிடித்து

தலைக்கணத்தில்

பொய்யில் உறைந்தால்

விடிவு எப்போது?

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.