பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தும் வழிகள்.

குழந்தைகள் வளர்ந்து குறிப்பிட்ட வயதை அடையும் போது அவர்களுக்கும் பெற்றோருக்கும் இடையே இயற்கையாகவே இடைவெளி உருவாகிறது. தலைமுறை இடைவெளி காரணமாக விருப்பங்கள், கருத்துக்கள் மாறுபடும்போது நெருக்கம் குறைய ஆரம்பிக்கிறது. 

குழந்தைகளுக்கு ஏற்றவாறு பெற்றோர் சில விஷயங்களை பொறுமையோடு கையாள வேண்டும் அதன் காரணமாக இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கும் அதற்கான சில குறிப்புகள் இதோ...

❇️தண்டிக்காதீர்கள்....!

குழந்தைகள் செய்யும் தவறுகளை எடுத்துக் கூறி திருத்துவதற்கு முற்படவேண்டும். கடுமையான தண்டனைகளை வழங்குவதால், குழந்தைகளின் இயல்பு மாறக்கூடும். பெற்றோர் மீது மனக்கசப்பு உண்டாகும் எனவே எதையும் பொறுமையாக கையாளக் கற்றுக் கொள்ளுங்கள்.

❇️பாதிப்பை முன்னரே கூறுங்கள்...!

குழந்தைகள் செய்யும் செயல் தவறாக இருப்பது போலத் தெரிந்தால், அவர்களின் மனநிலையைப் பொருத்து இயல்பாக பேச தொடங்குங்கள். 

உரையாடலின் போது குழந்தைகளின் தவறுகள் குறித்தும், அவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இதமான வார்த்தைகளால் எடுத்துக் கூறுங்கள். பாதிப்பை முன்னரே கூறும்போது குழந்தைகளுக்கும் அதை புரிந்துகொண்டு தவறுகளை தாங்களாகவே திருத்திக் கொள்வார்கள்.     இதமாக பேசுங்கள்....!

தவறுகளை எடுத்துக்கூறி திருத்துவதற்கு முயற்சி செய்யும்போது அவர்கள் மறுபடியும் அதே தவறை செய்யும் வாய்ப்புள்ளது. அப்போது மீண்டும் எடுத்துக் கூறி இதமாக சொல்லுங்கள். 

மிரட்டும் தோணியில் பேசும்போது, குழந்தைகள் அதை காது கொடுத்து கேட்காமல் அலட்சியப்படுத்த நேரிடலாம் எதையும் அன்பாக எடுத்துரைத்தால் மட்டுமே குழந்தைகளிடம் நம் பேச்சு எடுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

❇️சமூக வலைதளங்களை புறந்தள்ளுங்கள்....!

விஞ்ஞான வளர்ச்சியால் சமூக வலைதளங்கள் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டன. அவற்றின் மூலம் நன்மைகளை கற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பது போல், தவறுகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளன. 

எனவே சமூக வலைதளங்களுக்குள் மூழ்கி இருக்காமல் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள். அவர்களோடு இருக்கும் நேரத்தை மகிழ்ச்சியானதாக மாற்றுங்கள்.பகிர்தலை பழக்குங்கள்...!

குழந்தைகளிடம் பகிர்தலைப் பற்றி எடுத்துக் கூறுங்கள் நீங்களே குழந்தைகளுக்கு நண்பர்களாக மாறுங்கள். இதன் மூலம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எந்த விஷயத்தையும் உங்களிடம் பகிர வேண்டும் என்ற எண்ணம் இயற்கையாகவே தோன்றும்.அவ்வாறு பகிரும் போது அதிலுள்ள நல்ல விஷயங்களை கூறி பாராட்டுவதால் உங்கள் மீதான மதிப்பினை அதிகரிக்கும்.

❇️கண்டு கொள்ளாதது போல் கண்காணிப்பு....!

வளர்ந்த பிள்ளைகள் யாருடன் பேசுகிறார்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை நேரடியாக கண்காணிக்க கூடாது. 

தங்களை பெற்றோர்கள் சந்தேகிக்கிறார்கள் என்ற எண்ணம் அவருக்குள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அதே வேளையில் மொபைல் போனில்  யாருடன் எவ்வளவு நேரம் பேசுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். 

அவர்களுடைய நண்பர்களைப் பற்றியும் பொதுவாக விசாரித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். வளர்ந்த பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவதற்கு முயற்சிக்க வேண்டும் ஒரு நண்பராக இருந்து இடைவெளியைக் குறைத்தால் பல சிக்கல்கள் குறையும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.