10 நாளில் 5 கிலோ வரை எடை குறைக்கனுமா? இந்த டயட்டை செய்து வாங்க போதும்

பொதுவாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் பாசிப்பயறும் ஒன்றாக விளங்குகின்றது.

குறிப்பாக பாசிப்பயறில் அதிக அளவு புரதங்களும் மினரல்களும் மற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

இதை உங்களுடைய டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மிக வேகமாக உடல் கொழுப்பைக் குறைக்க முடியும்.

அந்தவகையில் இதை எப்படி டயட்டில் சேர்க்கலாம், குறிப்பாக இரண்டு வாரங்களுக்குள்ளாக குறைந்தபட்சம் 5 கிலோ எடையை எப்படி குறைக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க. 

❇️ முதல் மூன்று நாள்

முதல் மூன்று நாட்கள் வெறும் பாசிப்பயறு சூப் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.  

பாசிப்பயறுடன் சோம்பு, உப்பு, சீரகம், பூண்டு, இஞ்சி, வெங்காயம், பெருங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து வேகவைத்து சூப் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த சூப்பை ஒரு நாளைக்கு ஆறு வேளையாகப் பிரித்து இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு கப் என்று 3 நாட்கள் தொடர்ந்து குடித்து வர வேண்டும். 

❇️அடுத்த 5 நாட்கள்

அடுத்த 5 நாட்கள் இந்த பாசிப்பயறில் டயட்டில் காய்கறிகளை நிறைய சேர்த்துக் கொள்ளலாம்.  

பாசிப்பயறு சூப்புடன் சேர்த்து பொரியல், கூட்டு, வேகவைத்த காய்கறிகள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆவியில் வேகவைத்தோ அல்லது சாலட் வடிவிலோ எடுத்துக் கொள்ளலாம்.

கேரட், வெள்ளரிக்காய், பீட்ரூட், முள்ளங்கி, டர்னிப், சுரைக்காய், முட்டைகோஸ், வெங்காயம், பூசணிக்காய் ஆகிய காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.

காலையில் நிறைய சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் வேகவைத்த காய்கறிகளுடன் சூப் எடுத்துக் கொள்ளலாம்.

❇️ அடுத்த 2 நாட்கள்

பாசிப்பயறு டயட்டின் கடைசி இரண்டு நாட்களில் பாசிப்பயறை ஊற வைத்து அரைத்து தோசை அல்லது ரொட்டி செய்து சாப்பிடுங்கள். மூன்று வேளையும் ரொட்டியாக சாப்பிட முடியவில்லை என்றால், ஒரு வேளை சூப் இரண்டு வேளை ரொட்டி என்று சாப்பிடுங்கள். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.