தடைகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள்.


வாழ்க்கை என்னும் பாதையில் பெரிய குழியில் தடுக்கி விழுந்தாலும், "இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல், குழியில் இருந்து மேலே வருவது எப்படி என்று எண்ண வேண்டும்.

இடையூறுகள், அய்யப்பாடுகள், துன்ப துயரங்கள் போன்றவை எல்லா மனித வாழ்விலும் வருவது இயல்பானது தான். ஆனால்!, சிலர் அதிலே துவண்டு வாடி விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தோல்வியைத் தழுவுவது தவிர்க்க முடியாதது.

ஆனால்!, வெற்றியாளர்கள் எத்தகைய இக்கட்டான சூழலையும் கடந்துப் போய் விடுகிறார்கள்.

எதையாவது சாதிக்கும் முயற்சியில் இறங்கினால், தடைகள் உறுதியாக குறுக்கிடத் தான் செய்யும். எல்லோருக்கும் இப்படி நேர்ந்திருக்கும். ஆனால்!, அந்தத் தடைகள் நம் பயணத்தை நிறுத்தி விடக்கூடாது.

பாதையில் சுவர் குறுக்கிட்டால், ஓட்டத்தை நிறுத்தி விட்டு திரும்பிப் போகக்கூடாது, அதைத் தாண்டிப் போவது எப்படி எனக் கண்டுபிடிக்க வேண்டும்.

வெற்றி எல்லாம் எடுத்தவுடன் கிடைத்து விடுவதில்லை. இடையிடையே தடைகள், மனச் சோர்வை உண்டாக்கக் கூடிய நிகழ்ச்சிகள், இன்னபிற சிக்கல்களெல்லாம் ஏற்படும்.

அதனால் தளர்ச்சி கொள்ளக் கூடாது. நமக்கு ஏற்படும் தடைகள் தான் நம்மை நின்று நிதானித்துச் சிந்திக்கச் செய்கின்றன...
அடுத்த அடியை எப்படி எவ்வளவு அழுத்தத்தோடு எடுத்து வைக்க வேண்டும் என்பதற்கு அத்தகைய தடைகள் கூட நமக்குத் தேவை தான்.

வெற்றி பெற்றவர்களைக் கேட்டுப் பாருங்கள். அப்பப்பா!, என்னுடைய முன்னேற்றத்துக்குத் தான் எத்தனை தடைகள்...? இருந்தாலும் நான் மனம் தளரவில்லை. சளைக்காமல் முயன்றேன். அதனால் தான் இன்று இந்த நிலையில் வாழ்கிறேன் என்பார்கள்.

பயணம் செய்யும் போது வழியில் கல்லும் முள்ளும் இருக்கத் தான் செய்யும். நாம் தான் பார்த்து நடக்க வேண்டும். தவறிப் போய் முள் குத்தினாலும் அதைப் பிடுங்கி எறிந்து விட்டுப் பயணத்தைத் தொடர வேண்டியது தான்.

அதற்காக அங்கேயே அமர்ந்து விடுகிறோமா...? என்ன...!?
ஆம் நண்பர்களே...!

நம்மை தொல்லைகள், துன்பங்கள், தடைகள் குறுக்கிடும் போது துவண்டு விடாதீர்கள். அதுதான் வாழ்க்கை என்று உங்கள் திறமைகளுக்கு நீங்களே முற்றுப்புள்ளி வைக்காதீர்கள்...!

அதையும் மீறி நம்மால் முடியும், எதிர்கொள்ள முடியும் என்ற மனவுறுதியுடன் சிகரத்தினை நோக்கி சலிப்பின்றி பயணம் செய்யுங்கள்...!!
எந்தத் தடைகளுக்கும் அஞ்சாதீர்கள்.

 அவற்றை வரவேற்றுக் கொண்டாடுங்கள். ஏனெனில்!, தடைகள் தான் உங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும். நெருக்கடியான காலகட்டம் தான் மிகச் சிறந்த மனிதனை அடையாளம் காட்டுகின்றன...!!!

உடுமலை சு. தண்டபாணி

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.