அடுத்தவரின் மனதில் இடம் பிடிக்க...!"

உங்களுக்கு ஒரு வினாடி வினா.

கீழே இருக்கின்ற கேள்விகளுக்குப் பதிலை எழுதுங்கள், அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது. மிகவும் மூளையைக் கசக்கி மனதைக் குழப்பிக் கொள்ளவும் கூடாது...

உங்களால முடியவில்லை எனில் அடுத்தக் கேள்விக்கு கடந்து விடுங்கள். அதுவும் முடியவில்லையா...!

படித்தவாறே கடந்து விடுங்கள், சரியா...!

உலகிலேயே மிகப்பெரிய செல்வந்தர்கள் ஐந்து நபர்களைக் கூறுங்கள் பார்க்கலாம்... 

2004 மற்றும் 2009 பாராளுமன்றத் தேர்தலில் முக்கிய தலைவர்களை தோற்கடித்தவர்களில் நான்கு நபர்களைக் கூறுங்கள் பார்க்கலாம்...

உலகளவில் நடக்கும் அழகிப் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியப் பெண்கள் (மிஸ் யுனிவர்ஸ், மிஸ் வேர்ல்ட் இப்படி) ஒரு நான்கு நபர்களைக் கூறுங்கள் பார்க்கலாம்...

நோபல் பரிசு வாங்கிய உங்களுக்குத் தெரிந்த பத்து நபர்களைக் கூறுங்கள் பார்க்கலாம்...

கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயர்களைக் கூறுங்கள் பார்க்கலாம்...

பதில் வந்ததா...? உங்கள் பதில் உங்களுக்கே மனநிறைவாக இருந்ததா...? இல்லை தானே...!?

ஆக!, பொதுவாக  யாருக்குமே கடந்தக் காலத்தின் தலைப்புச் செய்திகளோ அல்லது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தவர்களோ நினைவில் நிற்பதில்லை.

இத்தனைக்கும் இவர்களெல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல. அந்தந்தத் துறையில் உச்சத்தைத் தொட்டவர்கள். மிகப்பெரிய சாதனையாளர்கள்..

ஆனால்...!? நாளாக நாளாக கைதட்டல்கள் காணாமல் போய் விடுகின்றன. சாதனைகள் மறக்கப்பட்டு விட்டன. விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களுடனேயே புதைந்துப் போய் விடுகின்றன.

சரி., இதோ மற்றொரு விநாடி வினா...!

உங்கள் பள்ளிக்காலத்தில் மிகச் சிறப்பாக பாடம் நடத்திய மூன்று ஆசிரியர்களைக் கூறுங்கள்...

உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிய மூன்று நண்பர்களைக் கூறுங்கள்...

உங்களுக்கு வாழ்க்கையில் பயனுள்ளதைக் கற்றுக் கொடுத்த சிலரது பெயர்களைக் கூறுங்கள்..

உங்கள் வாழ்க்கையை பொருளுள்ளதாகவும் ஈர்ப்புடையதாகவும் மாற்றிய சிலரைப் பட்டியலிடுங்கள்...

நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ அவர்கள் பெயர்களைக் கூறுங்கள்...

விடைகளை இப்போது உடனே எழுதிக் குவித்து இருப்பீர்களே...! இதிலிருந்து என்ன தெரிகிறது...?

உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் பணக்காரர்களோ, உலகப் புகழ் பெற்றவர்களோ அல்லது பாராட்டுக்களை குவித்தவர்களோ அல்ல.

உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களே. மற்றவர்களை மறக்கும் நீங்கள் இவர்களை மறப்பதில்லை..

பணம், பட்டம், பதவி இவற்றின் மூலம் பெறுகின்ற புகழோ, வெற்றியோ நிலையானதல்ல...

பிறருக்கு உதவி செய்து, பிறர் மீது அக்கறை கொண்டு ஒருவர் பெறும் புகழும், வெற்றியுமே நிலையானது...

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரிடம், இப்படி கேள்விகள் கேட்டு, அவர்கள் ஒருவராவது விடையில் உங்கள் பெயரையும் கூறுவார்கள் என்றால், நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்...  (கேட்டுத் தான் பாருங்களேன்...!)

ஆம் நண்பர்களே...!

சந்திர மண்டலத்தில் இடம் பிடிப்பது மட்டும் அறிவல்ல, மற்றவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்...!

மற்றவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமானால், மனிதநேயத்தோடு எப்போதும் ஏழ்மையில் வாடுபவர்களுக்கு உதவி செய்யுங்கள், உங்களை வெறுப்பவர்களுக்கும்  நல்லது செய்ய நினையுங்கள்...!!

கோவிலுக்குச் சென்று விழுந்து கும்பிட்டு, கடவுள் மனதில் இடம் பிடிப்பது இருக்கட்டும். முதலில் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் மனதில் நமக்கு இடம் இருக்கிறதா...? என்று  பாருங்கள்...!!!

உடுமலை சு. தண்டபாணி.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.