கிரீன் டீ அருந்துபவர்களா நீங்கள்! இவர்கள் எல்லாம் குடிக்க கூடாதாம்

இன்றைய காலகட்டத்தில் க்ரீன் டீயின் ட்ரெண்ட் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.இது ஆரோக்கியத்திற்கு நல்லது. அத்தோடு இது வழக்கமான டீயில் இருந்து வேறுபட்டது.

❇️ உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கிரீன் டீயை தங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. கிரீன் டீ உடலுக்கு ஆற்றலைத் தரும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்.

கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த மூலமாக உள்ளது. இது மன அழுத்தத்தை குறைக்கிறது. புத்துணர்ச்சியூட்டும் உணர்வைத் தருகிறது.

அத்தோடு கிரீன் டீ சிலருக்கு தீங்கு விளைவிக்கிறது. சிலர் கிரீன் டீ குடிக்க தடை உள்ளது.

அதிக பதட்டம் உள்ளவர்கள், க்ரீன் டீ அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் க்ரீன் டீயில் காஃபின் இருப்பதால் பதட்டம் இன்னும் அதிகரிக்கும்.

இதயத் துடிப்பு வேகமாக இருக்கும், தூக்கமின்மை பிரச்னை ஏற்படும். ஆகையால் அதிக பதட்டம் கொள்ளும் இயல்பு உள்ளவர்கள் முற்றிலும் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்கலாம், அல்லது குறைத்துக்கொள்ளலாம்.

❇️ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனைகள்

க்ரீன் டீயில் உள்ள டானின்கள் வயிற்றில் அமிலத்தை அதிகரித்து வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் வாந்தியை உண்டாக்கும்.

அல்சர் அல்லது ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். வயிறு காலியாக இருக்கும்போது கிரீன் டீ குடிக்கக்கூடாது.

❇️இரத்த சோகை

அதிக அளவு கிரீன் டீயை உட்கொள்வது ஆபத்தானது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் க்ரீன் டீயை உட்கொள்ள வேண்டாம்.

அது உங்கள் பிரச்சனையை அதிகரிக்கும். நீங்கள் ஏற்கனவே இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாலும், க்ரீன் டீயை உட்கொள்வது அதன் உறிஞ்சுதலை மேலும் குறைக்கும் என்பதாலும், பிரச்சனை மேலும் அதிகரிக்கலாம்.

❇️கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய் மார்கள்.

கிரீன் டீயில் காஃபின், கேட்டசின்கள் மற்றும் டானின்கள் உள்ளன. இந்த மூன்று பொருட்களும் கர்ப்பத்தின் அபாயத்தை அதிகரிக்கும்.  

நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது பாலூட்டும் தாயாக இருந்தால், ​​ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீன் டீ-க்கு மேல் குடிப்பது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

கருச்சிதைவு ஏற்படும் அபாயமும் ஏற்படலாம். அதே சமயம் பாலுடன் சேர்ந்து காஃபின் உங்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும்.

❇️ ஒற்றைத் தலைவலி

உங்களுக்கு மைக்ரேன் பிரச்சனை இருந்தால், க்ரீன் டீயை உட்கொள்ள வேண்டாம்.

க்ரீன் டீயில் உள்ள காஃபின் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும். நாள் முழுவதும் அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் கிரீன் டீ உட்கொண்டால், அது உங்கள் தலைவலியை அதிகரிக்கும்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.