துயரினைக் களையுங்கள்...!"

துயரற்ற மனிதன் என உலகில் எவரும் இல்லை. இந்தத் துயரம் என்பது ஒரு மனிதனுக்குப் புற்றுநோயைப் போன்றது.

புற்றுநோய்க் கிருமிகள் எப்படி உடலில் உள்ள மற்ற பாகங்களுக்கு விரைவாகப் பரவுகின்றதோ அதைப் போன்று, துயரென்பது ஒரு துயரம் மற்றொரு துயரினை ஆட்கொள்ளும் சக்தியைக் கொண்டது. 'தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக...'

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு துயரம் இருக்கத் தான் செய்கிறது...

ஒரு சிலர் துயரினை மட்டுமே நினைத்து வாழ்க்கையில் உள்ள இன்பங்களை இழந்து கொண்டு இருக்கிறார்கள். துயரங்களைக் கனமாக தாங்கிக் கொண்டு, நம்மை நாமே துன்பப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை...

துன்பங்களை நம்முடைய மனதிற்குள் புகுத்தி வைக்க, வைக்க அதன் அழுத்தம் பல மடங்கு மிகுதியாகி விடும். இதனால் விளையும் துயரினால் மனச்சோர்வும், மனச்சோர்வினால் மேலும் துயரங்களும் ஏற்படலாம்...,

எதற்கு, எது காரணம் என்கிற ஆராய்ச்சியை விட்டுவிட்டு

இரண்டிலிருந்தும் விலகி நின்று, வாழ்க்கைச் சிக்கல்களை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பது தான் முக்கியம்...

மாபெரும் தலைவர் 'வின்ஸ்டன் சர்ச்சில்' அவர்கள் ஒருமுறை ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் போது, துயர் கொள்ள எனக்கு நேரம் இல்லை என்றார்...

இதைக் கேட்டது ஒரு நிருபர். அந்த நிருபருக்கு ஒரே வியப்பு!. என்ன இது துயரியில்லாத ஒரு மனிதனா...? அல்லது அத்துயரினை தாம் உணர நேரம் இல்லை என்று கூறும் ஒரு மனிதனா...? என்று வியந்தார்...

வின்ஸ்டன் சர்ச்சில் அதற்குக் கூறிய விளக்கம்,

''நான் நாளும் 18 மணி நேரம் வேலை செய்கிறேன், அதனால் எனக்குத் துயர் கொள்வதற்கு நேரம் இல்லை என்று கூறினார். உண்மையிலேயே நல்ல பதில் மற்றும் உண்மையும் கூட...

கோடிகோடியாக சொத்து இருக்கலாம். பெரிய பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு வசதி இருக்கலாம். திறமையான மருத்துவர்களால் வேண்டுமானால் இறப்பினைத் தள்ளிப் போடலாம். ஆனால்! ஒருநாள் இந்த உயிர் போகத்தான் போகின்றது...

அப்போது யாராலும் போகின்ற உயிரைத் தடுத்து நிறுத்த முடியாது. அதுதான் வாழ்க்கையின் நியதி...!

இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டால் எதற்கும் துன்புறுவதற்கு அவசியமே இல்லை...!

ஆம் நண்பர்களே...!

எதுவுமே நிலைமாறாது இருக்கின்ற போது, உங்கள் துயரம் மட்டும் எப்படி நிலை மாறும்...?!

துயரினைக் களையுங்கள், மகிழ்வுடன் எப்போதும் இருங்கள்...!!

உடுமலை சு தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.