மனித வாழ்வில் மனசாட்சி.

"மனசாட்சிக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள் . "மனசாட்சி இருந்தால் இப்படிச் செய்வீர்களா...?" இதைப்போன்ற வாசகங்கள் பாமர மக்கள் முதல் படித்த அறிவார்ந்த மனிதர்கள் வரை அன்றாட வாழ்வில் அதிகமாகப் பயன்படுத்துவதைக் காண்கிறோம்...

“அது சரியில்லை என்று என் மனதிற்குத் தெரியும்,” அல்லது “நீங்க சொல்வதை என்னால் செய்ய முடியாது...!

அது தவறென்று ஏதோவொன்று எனக்குள் சொல்லிக் கிட்டே இருக்கின்றது” என்று நீங்கள் எப்போதாவது கூறி இருக்கிறீர்களா...? 

அப்படிச் சொல்லி இருந்தால் அதுதான் உங்கள் மனசாட்சியின் “குரல்;”

இது சரி அது தவறு என்று உங்களுக்குள் சொல்லுகிற, உங்களை ஆதரிக்கின்ற அல்லது உங்களைக் குற்றப்படுத்துகின்ற ஓர் உணர்வு...

ஆம், மனசாட்சி என்பது நமக்குள் இயல்பாகவே இருக்கிறது. நம்முடைய மனசாட்சி நமக்கு உதவ வேண்டுமென்றால், நாம் அதற்கு செவி சாய்க்க வேண்டும்...

நம்முடைய போக்கில் ஏதேனும் தவறு இருக்கிறதென நம் மனசாட்சி அல்லது உள்மனம் நமக்கு எச்சரிக்கை கொடுக்கலாம்...

அந்த எச்சரிப்புக்குச் செவி சாய்ப்பது தவறான செயலால் வரும் கெட்ட விளைவுகளைத் தவிர்க்க மட்டும் அல்லாமல், நம்முடைய மனசாட்சி தொடர்ந்து தகுந்த முறையில் செயல்படுவதற்கும் உதவுகிறது...

அமெரிக்காவின் ஜனதிபதியாவதற்கு முன்பு ஆபிராகம்லிங்கன் அவர்கள் வழக்கறிஞராகத் திகழ்ந்தார்...

அவர் புகழ்பெற்ற வழக்கறிஞராக விளங்கியதற்குக் காரணமே அவரது நேர்மை தான்...

உண்மைக்குப் புறம்பான எந்த வழக்கையும் ஏற்பதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்...

இதற்கு அவரிடம் காரணம் கேட்டதற்கு!,’

''உண்மையில்லை என்று தெரிந்த ஒரு வழக்கை நான் வாதத்துக்கு ஏற்றால், ஒவ்வொரு வினாடியும் நான் பொய்யன் என்பதை என் மனசாட்சி உரக்கமாக சொல்லிக் கொண்டிருக்கும்’’ என்றார்...

ஆம் நண்பர்களே...!

மனசாட்சி - நம் உண்மையான முகம்...! நம்மை நாமே சுயபரிசோதனை செய்ய உதவும்...!

உங்களுடைய மனசாட்சி கொடுக்கும் எச்சரிப்புகளை அசட்டை செய்து விடாதீர்கள்...!!

நம்முடைய மனசாட்சி நமக்கு உதவ வேண்டும் என்றால், நாம் அதற்கு செவி சாய்க்க வேண்டும். நாம் எல்லோருக்கும் மிகப்பெரிய நீதிபதி நம் மனசாட்சி தானே...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.