மகிழ்ச்சிக்கான மெய்யியல் கோட்பாடுகள்...!

மகிழ்ச்சி என்பது வேறொன்றும் இல்லை., நோயற்ற நிலையும் குறைந்த நினைவாற்றலும் தான்...!

மகிழ்ச்சியின் எல்லை பெரும்பாலும் துன்பத்தின் வாசலாக அமைகிறது...!

உலகமே வியந்த, பொறாமைப்பட்ட, உச்சமான நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி 56 வயதில் உலகைப் பிரிவதற்கு முன்பாக விட்டுச் சென்ற செய்தி...

"வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது. நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன்..."

பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்தப் பெருமையும் இப்போது எனக்குப் பொருளுடையதாகத் தோன்றுகிறது...

உங்கள் வாகனத்தை இயக்க எவரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக செல்வம் ஈட்ட எத்தனைப் பணியாட்களை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால்!, உங்கள் நோயையும், அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது...

எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடி விட முடியும். ஆனால் வாழ்க்கைத் தொலைந்து விட்டால்...? திரும்ப கிடைக்கவே கிடைக்காது...!

வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்தக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று கூற முடியாது. 

நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம். நாம் பக்குவமடையும் போது தான் சிலது நமக்குப் புரிய ஆரம்பிக்கும். முப்பது ரூபாய் கடிகாரமும் சரி, முன்னூறு ஆயிரம் (மூன்று இலட்சம்) ரூபாய் கடிகாரமும் சரி. ஒரே நேரம் தான் காட்டும்...

செலவழிக்க வாய்ப்பு இல்லாத போது உங்கள் பணமுடிப்பில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்று தான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்று தான்...

நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும் 30,000 சதுர அடி மாளிகையில் வசிப்பதும் ஒன்று தான்...

ஆகவே...! உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடம்  அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி! என்று உலகிற்கு கூறியுள்ளார்...

ஆம் நண்பர்களே...!

மகிழ்ச்சி என்பது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் தான் இருக்கிறது, மற்றவர்களை நேசித்து வாழ்பவர்களிடம் மகழ்ச்சியைக் காணலாம்...!

மகிழ்ச்சியானவர்கள் எப்போதும் புதுமை மற்றும் விந்தைகளை நம்புவதில்லை...!!

எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய கற்றுக் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவில்லை...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.