அளவிற்கு அதிகமான பூண்டு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

பொதுவாக சமையலைப் பொருத்தவரை பூண்டு மிக முக்கியமான பொருளாகும்.

பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி மைக்ரோபியல் பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்ற பண்புகள் காணப்படுகிறது.

இது பல மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளது. இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்வது நல்லதல்ல.   

அளவிற்கு அதிகமாக பூண்டு எடுத்துக் கொள்வது, உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதனால அளவோடு தான் பூண்டை உட்கொள்ள வேண்டும்.

அந்தவகையில் தற்போது அதிகளவு பூண்டு சாப்பிடுவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.  

நீங்கள் பூண்டை அதிகமாக உட்கொண்டால், உங்களுக்கு இரத்தப் போக்கு பிரச்சினைகள் ஏற்படலாம்.

பூண்டில் அல்லிசின் கலவை அதிகம் இருப்பதால், அதிகமாக உட்கொண்டால் கல்லீரலில் உள்ள நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். இது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும். 

அதிகமாக பூண்டு சாப்பிடுவதால் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு உண்டாகலாம்.

பச்சையாக பூண்டை எடுத்துக் கொள்வதால் தலைவலி உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.

பூண்டின் அதிகப்படியான பயன்பாடு வாய்வு தொல்லை மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும். 

பூண்டு அதிகமாக உட்கொள்வது குமட்டல், நெஞ்செரிச்சல், வாந்தி போன்றவற்றையும் ஏற்படுத்தும். 

பூண்டில் உடல் மற்றும் வாயில் துர்நாற்றம் வீசுவதற்கான பல்வேறு ரசாயனங்கள் உள்ளது. குறிப்பாக, அதிக சல்பர் இருப்பதால், அதனை அதிகமாக சாப்பிடும் போது வாய் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.