நிகழ்காலமே சாலச் சிறந்தது.

வாழ்க்கையில் வெற்றி பெறுதல் என்பது சில இயற்கை விதிகளையே சார்ந்துள்ளது!, அதில் ஒரு சிறப்பான விதி(Rule) என்னவென்றால் இன்றைய நாளில் நீங்கள் முழுவதுமாக வாழ்ந்து விடுங்கள். வருங்காலம் தானே வளமாக உருவாகி விடும் என்பது தான்...

இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று மூன்று காலங்கள் இருப்பதாக நாம் எண்ணுகிறோம்...!

இறந்த காலம் என்பது முன்பே சென்று விட்டதாகவும், நிகழ்காலம் என்பது தற்சமயம் நடந்து கொண்டிருக்கிறது என்றும், எதிர்காலம் என்பது இனிமேல் தான் வரப் போகிறது என்று நாம் நினைக்கின்றோம்...

இம்மூன்று காலங்களும் கற்பனையில் தான் இருக்கிறது. உண்மையில் ஒரே நிகழ்காலம் தான் ஒன்று தான் நம் முன் இருக்கிறது...!

நாம் பள்ளியில் படித்திருக்கிறோம். முதலில் இறந்த காலம், அதன் பிறகு நிகழ்காலம், இறுதியில் எதிர்காலம் என்று வருகிறது என்று...!

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்...

நாம் நாளும் சந்திப்பது நிகழ்காலத்தைத் தான்...!

நேற்றைய நிகழ்காலமே இறந்த காலம். இன்றைய நிகழ்காலமே உண்மையான நிகழ்காலம். நாளை நாம் அனுபவிக்கப் போகும் நிகழ்காலமே வருங்காலம் என்பதாகும்...!

எனவே "நிகழ்காலத்தை" (To day) நல்லபடியாக முழுமையாகப் பயன்படுத்துங்கள். அது பிற்கால வாழ்க்கையில் உங்களுக்குப் பல அன்பளிப்புக்களை (presents) வாரி வழங்கும்...

இதனாலாயே இன்று, இப்போது செய்யும் செயல்களுக்கு Present Tense என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம். இந்த நிகழ்காலத்தை நன்கு பயன்படுத்தவில்லை என்றால், உங்களை துன்பத்தில் ஆழ்த்தி விடும்...

நேற்றைய நிகழ்காலத்தை இறந்தகாலம் என்று கூறுகிறோம்!, கடந்த காலத்தை நாம் கடந்து வந்து விட்டோம். ஆனால்! மனதளவில் நாம் அதை மீண்டும் மீண்டும் அசை போட்டுக் கொண்டே இருக்கிறோம்...

கடந்தகால கசப்புகளை நெஞ்சில் சுமந்து கொண்டு துன்பம் அடைகின்றோம். அந்த கடந்த காலத்தில் நடந்ததை வைத்துக் கொண்டு இன்றைய நிகழ்காலத்தை எடைபோடுகிறோம். நிகழ்காலத்தையும் அதனால் வீணாக்கி விடுகிறோம்...

பின்பு எதிர்காலமாகிய நிகழ்காலத்திலும் அதே பழைய வேதனைகளைத் தான் சுமந்து கொண்டு செல்லப் போகிறோம்...!

எனவே நிகழ்காலம், எதிர்காலம் என்ற இரண்டையுமே நாம் பயன்படுத்தாமல் நமது கடந்த கால துயரத்தால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறோம்...

பிறகு!, வெற்றியானது எப்படி நம்மைத் தேடி வரும்...? 

ஆக!, கடந்த காலத்தில் நாம் அடைந்த துன்பங்கள், வேதனைகள் இவையெல்லாம் நினைத்தால் கோபத்தில் குருதி கொதிக்கிறது...! 

துயரத்தில் மனது காயமாகி விடுகிறது! நமது உடலே உணர்ச்சி வசப்பட்டு விடுகிறது. பின்பு தெளிவும், திறமையும் எப்படிக் கிடைக்கும்...!!??

கடந்த காலத்தை நினைத்து, நிகழ்காலத்தைக் கண்டு அச்சமடைகிறோம். மனம் கனத்துப் போகிறது!, அவை நம் வருங்காலத்தைப் பற்றிய பயனற்ற துன்பங்களையும் மாயைகளையும் ஏற்படுத்தி விடுகின்றன...

ஆம் நண்பர்களே...!

நிகழ்காலம் தான் மிகச் சிறந்தது. இந்தக் கணம் மட்டுமே உண்மை...!

கடந்த காலம் தொடர்பான நினைவுகளும், எதிர்காலம் குறித்த கற்பனைகளும் நிகழ்காலத்தைப் பாதிக்கக் கூடாது...!!

இந்த நாள், இந்த மணி, இந்த நாளிகைகள், ,

இந்த மணித்துளிகள் என எதையும் வீணாக்காதீர்கள். பின்னர் என்ன, வெற்றி உங்கள் காலடியில்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.