கருப்பை நீக்கினால் மட்டுமே பெண்கள் இனி அந்த ஆபத்தில் இருந்து தப்ப முடியும்.

கருப்பை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க, பெண்கள் கருப்பை நீக்க வேண்டும் என தற்போது மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருப்பை நீக்கம் அல்லது salpingectomy என்பது பொதுவாக நிரந்தர கருத்தடையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது கருப்பை புற்றுநோய் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்று வெளியானதில்,

பிள்ளைகள் இனி போதும் என்ற முடிவுக்கு வந்த தாய்மார்கள், கருப்பை நீக்கம் செய்து கொள்வது கருப்பை புற்றுநோய் என்ற ஆபத்தில் இருந்து தப்பிக்க காரணமாக அமையும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க புற்றுநோய் சொசைட்டியின் கூற்றுப்படி, அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 19,710 பெண்கள் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள், மேலும் ஆண்டுதோறும் 13,000 பேர் இந்த நோயால் இறக்கின்றனர்.

கருப்பை நீக்க சிகிச்சை

கருப்பை நீக்க சிகிச்சையானது மிக எளிதான முறையில் தற்போது மருத்துவர்கள் முன்னெடுக்கின்றனர். மட்டுமின்றி, சுமார் மூன்று வார காலத்தில் சிகிச்சைக்கு பின்னர் பெண்கள் சகஜ நிலைக்கும் திரும்புகின்றனர்.

ஆனால் சில சந்தர்ப்பங்களில் இந்த சிகிச்சையில் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், தொற்று, அருகிலுள்ள உறுப்புகளுக்கு சேதம் மற்றும் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறுகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.